என் மலர்![tooltip icon](/images/info-tooltip.svg)
இந்தியா
![கர்நாடகாவில் டிராக்டரை ஏற்றி போலீஸ்காரர் கொலை- மணல் கடத்தல் கும்பல் அட்டூழியம் கர்நாடகாவில் டிராக்டரை ஏற்றி போலீஸ்காரர் கொலை- மணல் கடத்தல் கும்பல் அட்டூழியம்](https://media.maalaimalar.com/h-upload/2023/06/16/1899427-murdered.webp)
X
இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
கர்நாடகாவில் டிராக்டரை ஏற்றி போலீஸ்காரர் கொலை- மணல் கடத்தல் கும்பல் அட்டூழியம்
By
Maalaimalar16 Jun 2023 2:39 PM IST (Updated: 16 Jun 2023 5:01 PM IST)
![Maalaimalar Maalaimalar](/images/authorplaceholder.jpg?type=1&v=2)
- போலீஸ்காரர் மயூரா மீது டிராக்டரை ஏற்றினார். இதில் போலீஸ்காரர் உயிரிழந்தார்.
- போலீசார் வழக்கு பதிவு செய்து டிராக்டர் டிரைவர் சித்தண்ணாவை கைது செய்தனர்.
பெங்களூரு:
கர்நாடகா மாநிலம் நெலோகி போலீஸ் நிலையத்தில் ஏட்டாக பணியாற்றியவர் மயூரா (வயது51). இவர் ஜேவர்தி தாலுகா நாராயண்பூர் அருகே சட்ட விரோதமாக மணல் கடத்திய டிராக்டரை தடுத்து நிறுத்த முயன்றார். அப்போது போலீஸ்காரர் மீது டிரைவர் டிராக்டரை ஏற்றினார். இதில் போலீஸ்காரர் உயிரிழந்தார்.
இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து டிராக்டர் டிரைவர் சித்தண்ணாவை கைது செய்தனர். அவர் போலீஸ் மீது டிராக்டர் ஏற்றியதை ஒப்புக் கொண்டார். இச்சம்பவம் கர்நாடகாவில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இது குறித்து மந்திரி பிரியங்கா கார்கே கூறும்போது, மணல் கடத்தலுக்கு எதிராக உடனடியாக நடவடிக்கை எடுக்க போலீசாருக்கு மீண்டும் உத்தரவு பிறப்பித்துள்ளேன். இச்சம்பவம் குறித்து விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளேன் என்றார்.
Next Story
×
X