search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    கச்சா எண்ணெய் விலை வீழ்ச்சி... பெட்ரோல், டீசல் விலை குறையுமா?
    X

    கச்சா எண்ணெய் விலை வீழ்ச்சி... பெட்ரோல், டீசல் விலை குறையுமா?

    • கச்சா எண்ணெய் விலை வீழ்ச்சியால் பெட்ரோல், டீசல் விலையை குறைப்பதில் எரிபொருள் சில்லரை விற்பனையாளர்கள் அவசரப்படவில்லை.
    • எரிபொருள் சில்லரை விற்பனையாளர்கள் ஒரு நாள் விலையைக் குறைத்து மீண்டும் உயர்த்த வேண்டிய சூழ்நிலையை விரும்பவில்லை என்றனர்.

    புதுடெல்லி:

    கச்சா எண்ணெய் விலைக்கு ஏற்ப பெட்ரோல்-டீசல் விலை நிர்ணயிக்கப்பட்டு வருகிறது.

    இந்த நிலையில் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை வீழ்ச்சி அடைந்துள்ளது. பீப்பாய் 70 அமெரிக்க டாலர்களாக உள்ளது. இதனால் பெட்ரோல், டீசல் விலை குறைக்கப்படுமா என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    பாராளுமன்றத் தேர்தலையொட்டி கடந்த மார்ச் 14-ந்தேதி பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.2 குறைக்கப்பட்டது. இதற்கிடையே மகாராஷ்டிரா சட்டமன்றத் தேர்தலுக்கு முன்பு கச்சா எண்ணெய் பீப்பாய்க்கு 80 அமெரிக்க டாலருக்கு குறைவாக இருந்தால் பெட்ரோல், டீசல் விலையை சில்லரை விற்பனையாளர்கள் குறைக்கலாம்.

    இதுகுறித்து அதிகாரிகள் கூறும்போது, கச்சா எண்ணெய் விலை வீழ்ச்சியால் பெட்ரோல், டீசல் விலையை குறைப்பதில் எரிபொருள் சில்லரை விற்பனையாளர்கள் அவசரப்படவில்லை.

    அந்த முடிவை எடுப்பதற்கு முன்பு சந்தையில் ஏற்ற இறக்கம் குறையும் வரை காத்திருந்திருப்பார்கள். கச்சா எண்ணெய் விலை தொடர்ந்து ஏற்ற இறக்கத்துடன் உள்ளது.

    கடந்த வாரம் ஒரு நாள் 70 அமெரிக்க டாலருக்கு கீழே வந்தது. ஆனால் அடுத்த நாள் விலை உயர்ந்தது. இதனால் எரிபொருள் சில்லரை விற்பனையாளர்கள் ஒரு நாள் விலையைக் குறைத்து மீண்டும் உயர்த்த வேண்டிய சூழ்நிலையை விரும்பவில்லை என்றனர்.

    Next Story
    ×