என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
இந்தியா
உதய்பூர் டெய்லர் கொலை- 4 மணி நேரத்திற்கு ஊரடங்கு தளர்வு
- ஜெகன்னாத் ரத யாத்திரை அமைதியான முறையில் நடைபெற்றதால், நிர்வாகம் இன்று தளர்வு அளிக்க முடிவு.
- இன்று மதியம் 12 மணி முதல் மாலை 4 மணி வரை ஊரடங்கு உத்தரவு தளர்வு.
ராஜஸ்தான் மாநிலம், உதய்பூரில் தையல்காரர் ஒருவர் பயங்கரவாதிகளால் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து, ஏழு காவல் நிலைய எல்லைகளில் விதிக்கப்பட்ட ஊரடங்கு உத்தரவை மதியம் 12 மணி முதல் 4 மணி வரை தளர்த்தி அம்மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.
கடந்த சில நாட்களுக்கு முன்பு, இடைநீக்கம் செய்யப்பட்ட பாஜக செய்தித் தொடர்பாளர் நுபர் சர்மாவின் முகமது நபிக்கு எதிரான சர்ச்சைக்குரிய கருத்துக்கு சமூக ஊடகங்களில் ஆதரவளித்ததற்காக கன்ஹையா லால் என்பவர் வெட்டிக் கொல்லப்பட்டார்.
குற்றம்சாட்டப்பட்டுள்ள இருவரை சில மணி நேரங்களுக்குப் பிறகு ராஜ்சமந்தில் கைது செய்தனர். இதனால் ஏற்பட்ட வன்முறை காரணமாக, அங்கு ஊரடங்க உத்தரவு விதிக்கப்பட்டது.
இந்நிலையில், இன்று மதியம் 12 மணி முதல் மாலை 4 மணி வரை ஊரடங்கு உத்தரவு தளர்த்தப்பட்டுள்ளதாக மாவட்ட நிர்வாக அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
மேலும், நேற்று ஆயிரக்கணக்கான மக்கள் பங்கேற்ற ஜெகன்நாத் ரத யாத்திரை அமைதியான முறையில் நடைபெற்றதால், நிர்வாகம் இன்று தளர்வு அளிக்க முடிவு செய்துள்ளதாக அதிகாரப்பூர்வ வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.