என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
இந்தியா
குருவாயூர் கோவிலில் இரவு நேரத்திலும் திருமணங்கள் நடத்த முடிவு
- முகூர்த்த நாட்களில் அதிகாலை 5 மணிக்கு தொடங்கும் திருமண நிகழ்ச்சிகள் பகல் 1.30 மணி வரை நடைபெறும்.
- நெருக்கடிக்கு தீர்வு காண கோவில் நிர்வாகம் முகூர்த்த நாட்களில் இரவு நேரத்திலும் திருமணங்கள் நடத்தலாமா என யோசித்து வருகிறார்கள்.
திருவனந்தபுரம்:
கேரள மாநிலம் குருவாயூரில் பிரசித்தி பெற்ற ஸ்ரீகிருஷ்ணர் கோவில் உள்ளது. இங்கு முகூர்த்த நாட்களில் ஏராளமானோர் திருமணம் செய்ய வருவார்கள். ஒரு நாளில் 250 திருமணங்கள் வரை நடந்துள்ளது. இதனால் கோவிலில் எப்போதும் பக்தர்கள் கூட்டமாகவே இருக்கும்.
முகூர்த்த நாட்களில் இங்கு அதிகாலை 5 மணிக்கு தொடங்கும் திருமண நிகழ்ச்சிகள் பகல் 1.30 மணி வரை நடைபெறும். அதற்குள் திருமணங்களை நடத்தி முடித்துவிட மணமக்களின் பெற்றோர் நினைப்பதால் கோவிலில் தரிசனம் செய்ய முடியாமல் பக்தர்கள் அவதிப்பட்டு வந்தனர்.
இந்த நெருக்கடிக்கு தீர்வு காண கோவில் நிர்வாகம் முகூர்த்த நாட்களில் இரவு நேரத்திலும் திருமணங்கள் நடத்தலாமா என யோசித்து வருகிறார்கள். இது தொடர்பாக கோவில் நிர்வாகிகள் விரைவில் கூடி ஆலோசனை நடத்த உள்ளனர். மேலும் கோவில் தந்திரிகளிடம் கருத்து கேட்டபின்பு இது குறித்து இறுதி முடிவு எடுக்கப்படும் எனவும் கோவில் நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.