என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
இந்தியா
காங்கிரஸ் தலைவர் தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் தொடங்கியது
- வாக்கு எண்ணிக்கை அக்டோபர் 19-ந்தேதி காலை 10 மணிக்கு தொடங்கி அன்றைய தினமே முடிவுகள் அறிவிக்கப்படும்.
- காலை 11 மணி முதல் மதியம் 3 மணி வரை மனு தாக்கல் செய்யலாம்.
2019-ம் ஆண்டு நடந்த பாராளுமன்ற தேர்தல் தோல்விக்கு பிறகு காங்கிரஸ் கட்சியின் தலைவர் பதவியில் இருந்து ராகுல் காந்தி பதவி விலகினார். இதையடுத்து சோனியா காந்தி கட்சியின் இடைக்கால தலைவராக பொறுப் பேற்றார்.
இதற்கிடையே காங்கிரஸ் கட்சியில் சீர்திருத்தம் தேவை என்று மேலிடத்தை விமர்சனம் செய்து கபில் சிபில், குலாம் நபி ஆசாத் போன்ற மூத்த தலைவர்கள் காங்கிரஸ் கடசியில் இருந்து விலகினார்கள். இதைத்தொடர்ந்து கட்சியை வலுப்படுத்துவதற்காக ராகுல்காந்தி பாதயாத்திரை மேற்கொண்டு வருகிறார்.
இதையடுத்து, காங்கிரஸ் தலைவர் தேர்தலுக்கான அறிவிப்பாணையை காங்கிரஸ் மத்திய தேர்தல் குழு நேற்று முன்தினம் வெளியிட்டது.
அதன்படி காங்கிரஸ் தலைவருக்கான தேர்தல் அக்டோபர் 17-ந்தேதி நடக்கிறது. 22 ஆண்டுக்கு பிறகு காங்கிரஸ் தலைவர் பதவிக்கு தேர்தல் நடைபெறுகிறது. கடைசியாக 2000 ஆண்டு நடந்த தேர்தலில் ஜிதேந்திர பிரசாத்தை தோற்கடித்து சோனியாகாந்தி தலைவரானார்.
இந்நிலையில், காங்கிரஸ் தலைவர் தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் இன்று தொடங்கியது. காலை 11 மணி முதல் மதியம் 3 மணி வரை மனு தாக்கல் செய்யலாம். போட்டியிட விருப்பம் உள்ளவர்கள் 30-ந்தேதி வரை மனு தாக்கல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அக்டோபர் 1-ந் தேதி பரிசீலனை நடைபெறும். மனுக்களை வாபஸ் பெற அக்டோபர் 8-ந்தேதி கடைசி நாளாகும்.
ஒன்றுக்கும் மேற்பட்டோர் போட்டியிட்டால் அக்டோபர் 17-ந் தேதி தேர்தல் நடைபெறும். காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை அனைத்து காங்கிரஸ் தலைமை அலுவலகங்களிலும் தேர்தல் நடைபெறும்.
வாக்கு எண்ணிக்கை அக்டோபர் 19-ந்தேதி காலை 10 மணிக்கு தொடங்கி அன்றைய தினமே முடிவுகள் அறிவிக்கப்படும்.
காங்கிரஸ் தலைவர் பதவிக்கு ராஜஸ்தான் முதல்-மந்திரியும், சீனியருமான அசோக் கெலாட் போட்டியிடுகிறார். சோனியா, ராகுல் ஆதரவுடன் அவர் களத்தில் குதிக்கிறார்.
கேரளாவில் இருந்து ராஜஸ்தான் திரும்பியவுடன் அசோக் கெலாட் வேட்பு மனு தாக்கல் செய்கிறார். இதேபோல் அதிருப்தி குழுவில் உள்ள சசிதரூர், மனீஷ் திவாரி ஆகியோரும் போட்டியிட உள்ளதாக கூறப்படுகிறது.
மத்திய பிரதேச முன்னாள் முதல் அமைச்சரும், மற்றொரு சீனியர் தலைவருமான திக் விஜய் சிங் காங்கிரஸ் தலைவர் பதவிக்கு போட்டியிடுவார் என்று முன்பு தகவல் வெளியானது. தற்போது தான் தலைவர் பதவிக்கு போட்டியிட வில்லை என்று திக்விஜய் சிங் அறிவித்து உள்ளார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்