search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    ஆயிரம் கோடிகளை கடந்த  குருவாயூர் கோவில் வைப்புத்தொகை
    X

    ஆயிரம் கோடிகளை கடந்த குருவாயூர் கோவில் வைப்புத்தொகை

    • குருவாயூர் கோவிலுக்கு பக்தர்கள் நன்கொடையாக வழங்கிய 124 கிலோ தங்கமும், பல்வேறு நகைகள் பதிக்கப்பட்ட 72 கிலோ தங்கமும், 6,073 கிலோ வெள்ளியும் இருக்கிறது.
    • சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கான வைப்புத்தொகை லட்சங்களிலேயே இருக்கிறது.

    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலத்தில் ஏராளமான பிரசித்தி பெற்ற ஆலயங்கள் இருக்கின்றன. அவற்றில் ஒன்று குருவாயூரில் உள்ள ஸ்ரீகிருஷ்ணர் கோவில். இந்த கோவிலுக்கு கேரள மாநிலம் மட்டுமின்றி பல்வேறு மாநிலங்களை சேர்ந்த பக்தர்கள் ஆண்டுதோறும் வந்து செல்கிறார்கள். இதனால் இந்த கோவிலுக்கு பக்தர்கள் செலுத்தும் காணிக்கை அதிகளவில் வருகிறது.

    குருவாயூர் ஸ்ரீகிருஷ்ணர் கோவில் மற்றும் சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு எவ்வளவு வைப்புத்தொகை மற்றும் நிலம் இருக்கிறது? என்று தகவல் அறியும் உரிமை சட்டத்தில் கேட்கப்பட்டிருந்தது. அதில் குருவாயூர் ஸ்ரீகிருஷ்ணர் கோவிலுக்கு சொந்தமாக 271 ஏக்கர் நிலமும், ரூ2,053கோடி வைப்புத் தொகையும் இருக்கும் தகவல் வெளிவந்துள்ளது.

    மேலும் குருவாயூர் கோவிலுக்கு பக்தர்கள் நன்கொடையாக வழங்கிய 124 கிலோ தங்கமும், பல்வேறு நகைகள் பதிக்கப்பட்ட 72 கிலோ தங்கமும், 6,073 கிலோ வெள்ளியும் இருக்கிறது. கோவிலின் பெயரில் உள்ள நகைகள் மற்றும் 271 ஏக்கர் நிலத்தின் மதிப்பு கணக்கிடப்படவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. கோவிலின் நிலையான வைப்புத்தொகையாக இருக்கும் ரூ.2,053-கோடியில் கேரள வங்கியில் உள்ள ரூ.176 கோடியும் அடங்கும்.

    குருவாயூர் கோவில் வைப்புத்தொகை 2 ஆயிரம் கோடியை தாண்டியிருக்கும் நிலையில், சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கான வைப்புத்தொகை லட்சங்களிலேயே இருக்கிறது. சபரிமலை ஐயப்பன் கோவிலின் நிலையான வைப்புத்தொகையாக ரூ.41.74 லட்சம் இருப்பாகவும், தங்கம் 227.82 கிலோ மற்றும் வெள்ளி 2,994 கிலோ உள்ளதாகவும் தகவல் அறியும் உரிமை சட்டத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    Next Story
    ×