என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
இந்தியா
அரியானா சட்டசபை தேர்தல்: வேட்பாளர்களை மாற்றக் கோரி பா.ஜ.க. தலைவர்கள் போர்க்கொடி
- கலனூர் தொகுதியில் வேட்பாளர் ரேணு பாலாவை மாற்ற வேண்டும் என்று பா.ஜ.க. தொண்டர்கள் கட்சித் தலைமையை வலியுறுத்தியுள்ளனர்.
- ரேவாரி தொகுதியில் வேட்பாளர்கள் லட்சுமண் யாதவை மாற்றுமாறு முன்னாள் எம்.எல்.ஏ. ரண்டீர் கப்திவாஸ், அரவிந்த் யாதவ் ஆகியோர் வலியுறுத்தியுள்ளனர்.
அரியானா:
90 தொகுதிகளை கொண்ட அரியானா சட்டசபைக்கு வருகிற அக்டோபர் 5-ந்தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடக்கிறது. இதையடுத்து அங்கு தேர்தல் சூடு பிடித்துள்ளது.
அனைத்து கட்சிகளும் வேட்பாளர் தேர்வு, பிரசார வியூகம் வகுப்பது உள்ளிட்ட செயல்களில் ஈடுபட்டு வருகின்றன. பா.ஜ.க கட்சி, 67 தொகுதிகளுக்கான முதல் கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டது.
இந்த நிலையில் சில வேட்பாளர்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து பா.ஜ.க தலைவர்கள் போர்க்கொடி தூக்கி உள்ளனர். சில தகுதியற்றவர்களுக்கு தேர்தலில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.
முன்னாள் எம்.எல்.ஏ நரேஷ் கவுசிக், ஜஜ்ஜரின் பஹதுர்கர் தொகுதியில் தனது தம்பியை வேட்பாளராக அறிவித்ததற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
கலனூர் தொகுதியில் வேட்பாளர் ரேணு பாலாவை மாற்ற வேண்டும் என்று பா.ஜ.க. தொண்டர்கள் கட்சித் தலைமையை வலியுறுத்தியுள்ளனர்.
ரேவாரி தொகுதியில் வேட்பாளர்கள் லட்சுமண் யாதவை மாற்றுமாறு முன்னாள் எம்.எல்.ஏ. ரண்டீர் கப்திவாஸ், அரவிந்த் யாதவ் ஆகியோர் வலியுறுத்தியுள்ளனர்.
இல்லையென்றால் தங்களில் ஒருவர் சுயேட்சையாக போட்டியிடுவோம் என்று தெரிவித்துள்ளனர். இதையடுத்து அதிருப்தி தலைவர்களை சமாதானப்படுத்தும் முயற்சியில் பா.ஜ.க. கட்சி தலைமை ஈடுபட்டு உள்ளது.