என் மலர்
இந்தியா

4 ஆண்டுகளுக்கு ஒருமுறை மனைவியை மாற்றி வருகிறார் பவன் கல்யாண்
- நாயுடுவுக்காக தனது கட்சிப் பணியாளர்கள் உட்பட அனைத்தையும் தியாகம் செய்து வருகிறார்.
- "ஆந்திராவில், எந்த ஒரு பெரிய அரசியல் கட்சியும் தனித்து போட்டியிட முடியாது.
திருப்பதி:
ஆந்திர மாநிலம் மேற்கு கோதாவரி மாவட்டம் பீமாவரத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் முதல் மந்திரி ஜெகன்மோகன் ரெட்டி பேசியதாவது:-
நடிகர் பவன் கல்யாண் 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை மனைவியை மாற்றி வருகிறார். அவர் ஒரு கல்யாண ஸ்டார். அவரை போன்ற அரசியல்வாதியை எந்தப் பெண் குழந்தைகளின் பெற்றோராவது நம்ப முடியுமா? பவன் கல்யாண் எம்.எல்.ஏ.வாகவோ அல்லது முதல் மந்திரியாக அமர்ந்தால் சிறுமிகளின் எதிர்காலம் என்னவாகும்?
"மிஸ்டர். பவன் கல்யாணுக்கு வாக்களிப்பது புத்திசாலித்தனமான முடிவு அல்ல பக்கத்து வீட்டுக்காரரான சந்திரபாபு நாயுடு ஒரு மாநிலத்தின் முதல்-மந்திரியாக வருவதற்காக அரசியல் கட்சியை நிறுவிய ஒரே அரசியல்வாதி பவன் கல்யாண் மட்டுமே.
நாயுடுவுக்காக தனது கட்சிப் பணியாளர்கள் உட்பட அனைத்தையும் தியாகம் செய்து வருகிறார். ஒரு பேக்கேஜ்'க்காக மட்டுமே அவர் தியாகம் செய்து வருகிறார்.
"ஆந்திராவில், எந்த ஒரு பெரிய அரசியல் கட்சியும் தனித்து போட்டியிட முடியாது.
இவ்வாறு அவர் பேசினார்.
நடிகர் பவன் கல்யாணின் தனிப்பட்ட வாழ்க்கை குறித்து முதல் மந்திரி விமர்சித்திருப்பது ஆந்திர அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியது.






