என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
இந்தியா
ஜே.இ.இ. முதன்மை தேர்வு முடிவுகள் வெளியீடு- பெங்களூர் மாணவர் ஆர்.கே. ஷிசிர் முதலிடம்
- நாடு முழுவதும் 1.56 லட்சம் பேர் இந்த தேர்வை எழுதினர்.
- மும்பை மண்டலம் நடத்திய தேர்வில் பெங்களூர் மாணவர் ஆர்.கே.ஷிசிர் ஜே.இ.இ. முதன்மை தேர்வில் முதல் இடத்தை பிடித்தார்.
ஜே.இ.இ. முதல்நிலை மற்றும் ஜே.இ.இ. முதன்மை (அட்வான்ஸ்) தேர்வு என 2 கட்டங்களாக நடத்தப்படும். முதல்நிலை தேர்வில் தகுதி பெறுபவர்கள் என்.ஐ.டி., ஐ.ஐ.டி. போன்ற மத்திய தொழில் நுட்ப கல்வி நிறுவனங்களில் இளநிலை பொறியியல் படிப்புகளில் சேர்க்கை பெற முடியும்.
மேலும் இந்த தேர்வில் முதல் 2.5 லட்சம் இடங்களில் வருபவர்கள் ஜே.இ.இ. முதன்மை தேர்வை எழுதும் தகுதியை பெறுவர்.
முதன்மை தேர்வில் தகுதி பெறுபவர்கள் நாடு முழுவதும் உள்ள 23 ஐ.ஐ.டி. கல்வி நிறுவனங்களில் இளநிலை பொறியியல்- தொழில்நுட்ப படிப்புகளில் சேர்க்கை பெற முடியும்.
இந்தநிலையில் ஜே.இ.இ. முதன்மை தேர்வு முடிவுகள் இன்று காலை 11 மணிக்கு jeeadv.ac.in என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டு உள்ளது. நாடு முழுவதும் 1.56 லட்சம் பேர் இந்த தேர்வை எழுதினர். இதில் 40 ஆயிரத்து 712 பேர் தேர்ச்சி பெற்றனர். மாணவர்கள் 6 ஆயிரத்து 516 பேர் தேர்ச்சி பெற்றனர்.
மும்பை மண்டலம் நடத்திய தேர்வில் பெங்களூர் மாணவர் ஆர்.கே.ஷிசிர் ஜே.இ.இ. முதன்மை தேர்வில் முதல் இடத்தை பிடித்தார். அவர் 360 மதிப்பெண்ணுக்கு 314 மார்க் பெற்றார்.