என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
இந்தியா
ஜோஷிமத் கிராமத்தில் மீண்டும் நடுரோட்டில் 6 அடி பள்ளம்- பொதுமக்கள் பீதி
- ஜோஷிமத் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதியில் கடந்த சில நாட்களாக பலத்த மழை பெய்து வருகிறது.
- பள்ளத்தில் தற்காலிகமாக கற்கள் மற்றும் மணல்களை கொட்டி மூடி வைத்துள்ளனர்.
ஜோஷிமத்:
உத்தரகாண்ட் மாநிலம் ஷாமோலி மாவட்டத்தில் உள்ள ஜோஷிமத் கிராமத்தில் கடந்த ஆண்டு வீடுகள் மற்றும் கட்டிடங்களில் கடுமையான விரிசல் ஏற்பட்டது. ரோடுகளும் 2-ஆக பிளந்தது. இதனால் பரபரப்பு ஏற்பட்டது.
இதையடுத்து வாழுவதற்கு தகுதியில்லாத 181 வீடுகளை சேர்ந்த பொதுமக்கள் அப்புறப்படுத்தப்பட்டு நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டனர். இன்று வரை பலர் அந்த முகாமிலேயே தங்கி உள்ளனர்.
இந்த நிலையில் ஜோஷிமத் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதியில் கடந்த சில நாட்களாக பலத்த மழை பெய்து வருகிறது.அப்போது அங்குள்ள ஒரு தெருவில் திடீரென 6 அடிக்கு பள்ளம் ஏற்பட்டது. அதிர்ஷ்டவசமாக இதில் யாரும் சிக்கவில்லை.
இந்த சம்பவத்தால் அப்பகுதி மக்கள் பீதிஅடைந்துள்ளனர். தொடர்ந்து மழை பெய்து வருவதால் அடுத்து என்ன நடக்குமோ? என்ற அச்சத்தில் அவர்கள் உள்ளனர்.
ரோட்டில் 6 அடி பள்ளம் உருவானதையடுத்து அதிகாரிகள் அங்கு விரைந்து சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.அந்த பள்ளத்தில் தற்காலிகமாக கற்கள் மற்றும் மணல்களை கொட்டி மூடி வைத்துள்ளனர்.