என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
இந்தியா
கமல்நாத்-ஐ சமரசம் செய்யும் காங்கிரஸ்
- காங்கிரஸ் பொதுச் செயலாளர்களில் ஒருவரான ஜிதேந்திரசிங் இதற்கான பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்.
- கமல்நாத் எத்தகைய முடிவு எடுப்பார் என்று தெரியாததால் குழப்பம் நீடிக்கிறது.
மத்திய பிரதேச முன்னாள் முதல்-மந்திரியும், காங்கிரஸ் மூத்த தலைவர்களில் ஒருவருமான கமல்நாத் தனது மகன் மற்றும் 30-க்கும் மேற்பட்ட எம்.எல்.ஏ.க்களுடன் காங்கிரசில் இருந்து விலகி பாரதிய ஜனதாவில் சேரப்போவதாக வெளியான தகவல் பரபரப்பை ஏற்படுத்தியது. இதை கமல்நாத்தின் உதவியாளரும், காங்கிரஸ் தலைவர்களும் மறுத்தனர். என்றாலும் கமல்நாத்தும் அவரது ஆதரவு எம்.எல்.ஏ.க்களும் தொடர்ந்து டெல்லியில் தங்கியிருப்பது சந்தேகத்தை ஏற்படுத்தி உள்ளது. இதையடுத்து மத்திய பிரதேச காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களை சமரசம் செய்யும் முயற்சியை காங்கிரஸ் மேலிட தலைவர்கள் மேற்கொண்டுள்ளனர்.
காங்கிரஸ் பொதுச் செயலாளர்களில் ஒருவரான ஜிதேந்திரசிங் இதற்கான பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார். அவர் போபால் சென்று காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். அவர்களிடம் தற்போதைய பிரச்சினைகள் பற்றி விரிவாக பேசினார். காங்கிரசில் இருந்து விலக வேண்டாம் என்றும் அவர் கேட்டுக் கொண்டார். என்றாலும் கமல்நாத் எத்தகைய முடிவு எடுப்பார் என்று தெரியாததால் குழப்பம் நீடிக்கிறது.