என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
இந்தியா
கொலை முயற்சி வழக்கில் 10 ஆண்டு சிறை- லட்சத்தீவு எம்.பி. தகுதி நீக்கம்
- லட்சத்தீவு எம்.பி. முகமது பைசலுக்கு 10 ஆண்டு ஜெயில் தண்டனை விதித்து கோர்ட்டு கடந்த சில தினங்களுக்கு முன்பு தீர்ப்பு வழங்கியது.
- லட்சத்தீவு எம்.பி. முகமது பைசல், எம்.பி. பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
புதுடெல்லி:
லட்சத்தீவு எம்.பி.யாக இருப்பவர் முகமது பைசல் தேசியவாத காங்கிரஸ் கட்சி சார்பில் பாராளுமன்ற மக்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார்.
2009-ம் ஆண்டு நடந்த பாராளுமன்ற தேர்தல் பிரசாரத்தின் போது இவருக்கும், லட்சத்தீவு முன்னாள் எம்.பி.யும், காங்கிரஸ் மூத்த தலைவருமான மறைந்த பி.எம்.சயீத்தின் மருமகன் முகமது சாலே என்பவருக்கும் மோதல் ஏற்பட்டது.
அப்போது முகமது பைசல், அவரது சகோதரர்கள் மற்றும் சிலர் முகமதுசலேவை கடுமையாக தாக்கினர். இதில் படுகாயம் அடைந்த முகமது சலே விமானம் மூலம் கொச்சி கொண்டு செல்லப்பட்டு தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.
இதையடுத்து முகமது பைசல், அவரது சகோதரர்கள் உள்பட சிலர் மீது கொலை முயற்சி வழக்கு பதிவு செய்யப்பட்டது.
கொலை முயற்சி வழக்கில் லட்சத்தீவு எம்.பி. முகமது பைசலுக்கு 10 ஆண்டு ஜெயில் தண்டனை விதித்து கோர்ட்டு கடந்த சில தினங்களுக்கு முன்பு தீர்ப்பு வழங்கியது. 4 பேருக்கு 10 ஆண்டு சிறை தண்டனையை தலா ரூ.1 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது.
இதுகுறித்து கருத்து தெரிவித்த முகமது பைசல் "அரசியல் உள் நோக்கத்துக்காக தன் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. இந்த தீர்ப்பை எதிர்த்து அப்பீல் செய்வேன்" என்றார்.
இந்தநிலையில் கொலை முயற்சி வழக்கில் 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ள லட்சத்தீவு எம்.பி. முகமது பைசல், எம்.பி. பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
இதை பாராளுமன்ற மக்களவை செயலகம் தெரிவித்தது.