என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
இந்தியா
நிலத்தகராறில் பெண்களிடையே தகராறு- 2 குழந்தைகளை கிணற்றில் தள்ளி கொன்று தாய் தற்கொலை
- வி.கோட்டா தீயணைப்பு துறையினர் மற்றும் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
- சம்பவ இடத்திற்கு வந்து 3 பேரின் உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக அங்குள்ள அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
திருப்பதி:
ஆந்திர மாநிலம், வி.கோட்டா அருகே உள்ள ஜிவனி பள்ளியை சேர்ந்தவர் வெங்கட்ரமணா. ஆட்டோ டிரைவர். இவருக்கும் ராம தீர்த்தம் பகுதியை சேர்ந்த சின்னப்பா மகள் அருணா (வயது 30) என்பவருக்கும் கடந்த 2009-ம் ஆண்டு திருமணம் நடந்தது.
தம்பதிக்கு ஹரிஷ் (12), ஜித்தின் (9) என 2 மகன்கள் இருந்தனர். வெங்கட்ரமணாவின் தம்பி மனைவி காயத்ரி. நிலப் பிரச்சனை சம்பந்தமாக அருணாவுக்கும், காயத்ரிக்கும் அடிக்கடி தகராறு நடந்து வந்தது. இதுகுறித்து அருணா தனது கணவரிடம் தெரிவித்த போது அவர் ஏதும் கண்டு கொள்ளாமல் இருந்து வந்துள்ளார்.
நேற்று காலை அருணாவுக்கும், காயத்ரிக்கும் இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டது. இதனால் வாழ்க்கையில் விரக்தி அடைந்த அருணா தனது 2 பிள்ளைகளையும் அழைத்துக் கொண்டு ஊருக்கு ஒதுக்குப்புறமாக உள்ள கிணற்றில் இருவரையும் தள்ளிவிட்டு தானும் குதித்தார்.
மாலை வீட்டிற்கு வந்த வெங்கட்ரமணா மனைவி மற்றும் குழந்தைகள் வீட்டில் இல்லாததை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
வெங்கட்ரமணா மற்றும் உறவினர்கள் அவர்களை பல்வேறு இடங்களில் தேடி பார்த்தனர்.
அப்போது அங்குள்ள கிணற்றின் கரை மீது நித்தின் அணிந்திருந்த செருப்பு இருந்தது. இதனால் சந்தேகம் அடைந்த வெங்கட்ரமணா உறவினர்கள் கிணற்றில் குதித்து அருணா மற்றும் அவரது பிள்ளைகளில் உடல்களை தேடினர்.
இதுகுறித்து வி.கோட்டா தீயணைப்பு துறையினர் மற்றும் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அவர்கள் சம்பவ இடத்திற்கு வந்து 3 பேரின் உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக அங்குள்ள அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். நிலத்தகராறு காரணமாக தாய் 2 பிள்ளைகளை கிணற்றில் தள்ளி விட்டு தற்கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.