search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    கன்வார் யாத்திரையின் போது தாயை தோளில் சுமந்து சென்ற வாலிபர்
    X

    கன்வார் யாத்திரையின் போது தாயை தோளில் சுமந்து சென்ற வாலிபர்

    • கன்வார் யாத்திரையின் போது ஒரு இளைஞர் தனது தாயை தோளிலும், மற்றொரு தோளில் கங்கை நீரையும் சுமந்து சென்ற வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி உள்ளது.
    • கன்வார் யாத்திரையின் போது ஒரு இளைஞர் தனது தாயை தோளிலும், மற்றொரு தோளில் கங்கை நீரையும் சுமந்து சென்ற வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி உள்ளது.

    வட மாநிலங்களில் ஆண்டு தோறும் கன்வார் யாத்திரை ஜூலை மாதம் தொடங்கி ஆகஸ்டு இறுதி வரை நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டு கன்வார் யாத்திரை கடந்த 4-ந்தேதி தொடங்கி உள்ளது. இந்த யாத்திரையின் போது சிவ பக்தர்கள் ஒன்று கூடி கங்கை நதியில் இருந்து புனித நீரை எடுத்து வந்து சிவலிங்கத்திற்கு சமர்ப்பிப்பதே முக்கிய நிகழ்வாகும்.

    இதற்காக சிவ பக்தர்கள் காவி உடை அணிந்து தோள்களில் மூங்கிலால் ஆன கம்புடன் புனித நீரை கூடத்தில் கட்டி தொங்க விட்டு பாதயாத்திரையாக நடந்தே புனித தலங்களுக்கு சென்று சிவ பெருமானுக்கு நீரை அர்ப்பணிப்பார்கள்.

    இந்நிலையில் ஹரித்துவாரில் கன்வார் யாத்திரையின் போது ஒரு இளைஞர் தனது தாயை தோளிலும், மற்றொரு தோளில் கங்கை நீரையும் சுமந்து சென்ற வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி உள்ளது. 11 விநாடிகள் கொண்ட இந்த வீடியோ டுவிட்டரில் பகிரப்பட்டதில் இருந்து 42 ஆயிரத்திற்கும் அதிகமான பார்வைகளையும், 1800-க்கும் அதிகமான லைக்குகளையும் குவித்து வருகிறது. வீடியோவை பார்த்த பயனர்கள் அந்த வாலிபரை பாராட்டி கருத்துக்களை பதிவிட்டு வருகிறார்கள்.

    Next Story
    ×