என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
இந்தியா
ஜெகன்மோகன் ரெட்டி பிறந்தநாள் விழாவில் நடனமாடி அசத்திய அமைச்சர் ரோஜா
- திருப்பதியில் பிறந்து வளர்ந்து கலைத்துறையில் சிறந்து விளங்கியதால், இன்று எனக்கு கலைத்துறையில் ஒரு அங்கீகாரம் கிடைத்துள்ளது.
- கலைத்துறைக்கு சேவை செய்யும் பாக்கியமும் கிடைத்துள்ளது.
திருப்பதி:
ஆந்திர முதல்-அமைச்சர் ஜெகன்மோகன்ரெட்டியின் 50-வது பிறந்தநாளை முன்னிட்டு திருப்பதியில் உள்ள மகதி கலையரங்கில் 3 நாட்கள் கலாசார நிகழ்ச்சிகள் நடக்கிறது. அதன் தொடக்க நிகழ்ச்சி நேற்று நடந்தது.
ஆந்திர மாநில துணை முதல்-மந்திரி நாராயணசாமி பங்கேற்று குத்து விளக்கேற்றி நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார்.
நிகழ்ச்சியில் ஆந்திர மாநில அமைச்சரும் நடிகையுமான ரோஜா பங்கேற்றார். அவர் பேசுகையில்:-
முதல்-அமைச்சர் ஒய்.எஸ். ஜெகன்மோகன்ரெட்டி பிறந்தநாளையொட்டி பல்வேறு கலைப் போட்டிகள் நடத்தப்பட்டு, அதில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்படும்.
நான் திருப்பதியில் பிறந்து வளர்ந்து கலைத் துறையில் சிறந்து விளங்கியதால், இன்று எனக்கு கலைத்துறையில் ஒரு அங்கீகாரம் கிடைத்துள்ளது. கலைத்துறைக்கு சேவை செய்யும் பாக்கியமும் கிடைத்துள்ளது.
அது மட்டுமின்றி ஆந்திர அரசியலிலும் சிறப்பாக செயல்பட்டுவருகிறேன். அமைச்சராக உயர்ந்து மக்களுக்கு சேவை செய்து வருகிறேன், என்றார்.
நிகழ்ச்சியில் பரதநாட்டியம் குச்சிப்புடி கிராமிய கலை நிகழ்ச்சிகள் நடந்தன.
விழாவில் கலந்து கொண்ட தொண்டர்களை உற்சாகப்படுத்தும் விதமாக அமைச்சர் ரோஜாவும் கலைக்குழுவினருடன் நடனமாடி அசத்தினார்.
இதனைக் கண்ட கட்சி தொண்டர்கள் கைத்தட்டி ஆரவாரம் செய்தனர்.