search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    கஞ்சா போதையில் வீட்டிற்கு வந்த 10-ம் வகுப்பு மாணவி: தாய் போலீசில் புகார்
    X

    கஞ்சா போதையில் வீட்டிற்கு வந்த 10-ம் வகுப்பு மாணவி: தாய் போலீசில் புகார்

    • பள்ளி அருகிலேயே மாணவ, மாணவிகளுக்கு கஞ்சா விற்பனை செய்வதால் அவர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகி உள்ளது.
    • ஆட்சியாளர்கள் கஞ்சா விற்பனை செய்பவர்களுக்கு துணை போவதாக எதிர்க்கட்சியினர் குற்றம் சாட்டினர்.

    திருப்பதி:

    திருப்பதி அடுத்த சந்திரகிரி பகுதியை சேர்ந்தவர் 15 வயது சிறுமி. இவர் அதே பகுதியில் உள்ள அரசு பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வருகிறார்.

    இவர் நேற்று பள்ளி முடிந்து மாலை வீட்டிற்கு வந்தார். புத்தகப் பையை வீட்டில் வைத்துவிட்டு வெளியே சென்றார். சுமார் 2 மணி நேரம் கழித்து போதையில் தள்ளாடியபடி வீட்டுக்கு வந்தார்.

    இதனை கண்ட அவரது தாய் அதிர்ச்சி அடைந்து மகளிடம் விசாரணை நடத்தினார். அப்போது மாணவி பள்ளி அருகே உள்ள டீக்கடையில் கஞ்சா புகைத்ததாக தெரிவித்தார். இதையடுத்து டீ கடைக்கு சென்ற மாணவியின் தாய் மகளுக்கு எதற்காக கஞ்சா விற்பனை செய்தாய் என தட்டிக்கேட்டார்.

    அதற்கு அவர் உங்களுடைய மகள் தினமும் ஆண் நண்பர்களுடன் வந்து கஞ்சா அடித்துவிட்டு செல்வதாகவும், பணம் கொடுப்பதால் கஞ்சா கொடுப்பதாகவும் தெரிவித்தார்.

    இதையடுத்து சிறுமியின் தாய் சந்திரகிரி போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    பள்ளி அருகிலேயே மாணவ, மாணவிகளுக்கு கஞ்சா விற்பனை செய்வதால் அவர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகி உள்ளது. ஆட்சியாளர்கள் கஞ்சா விற்பனை செய்பவர்களுக்கு துணை போவதாக எதிர்க்கட்சியினர் குற்றம் சாட்டினர்.

    இதற்கு சந்திரகிரி எம்.எல்.ஏ சிவி ரெட்டி பாஸ்கர் ரெட்டி சமூக விரோத செயல்களில் ஈடுபடுபவர்கள் யாராக இருந்தாலும் போலீசார் பாரபட்சம் இன்றி கைது செய்து கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    ஒரு சிலர் செய்யும் தவறுகளுக்கு ஒட்டுமொத்தமாக ஆட்சியை குறை கூறுவதை எதிர்க்கட்சிகள் நிறுத்தி கொள்ள வேண்டும் என்றார்.

    Next Story
    ×