என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
இந்தியா
மும்பையில் ரூ.29 ஆயிரம் கோடி திட்டங்களை பிரதமர் மோடி தொடங்கி வைக்கிறார்
- ரூ. 6,300 கோடி மதிப்பிலான கோரேகான் முலுண்ட் இணைப்புச் சாலையில் சுரங்கப்பாதை அமைக்கும் திட்டத்திற்கும் பிரதமர் மோடி அடிக்கல் நாட்டுகிறார்.
- நவி மும்பையில் உள்ள கல்யாண் யார்டு மறுவடிவமைப்பு மற்றும் விரைவுச் சக்தி பன்னோக்கு சரக்கு முனையத்திற்கு அடிக்கல் நாட்டுகிறார்.
பிரதமர் மோடி இன்று மகாராஷ்டிரா மாநிலம் மும்பைக்கு செல்கிறார்.
மாலை 5.30 மணிக்கு மும்பை கோரேகானில் உள்ள நெஸ்கோ கண்காட்சி மையத்தில் நடக்கும் நிகழ்ச்சியில் பங்கேற்று ரூ.29,400 கோடி மதிப்பிலான சாலை, ரெயில்வே, துறைமுகங்கள் ஆகிய துறைகள் தொடர்பான பல திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுகிறார்.
இதில் ரூ.16,600 கோடி மதிப்பிலான தானே-போரிவலி சுரங்கப்பாதை திட்டத்திற்கு அடிக்கல் நாட்டுகிறார். இந்த இரட்டை குழாய் சுரங்கப்பாதை சஞ்சய் காந்தி தேசிய பூங்காவிற்கு கீழே செல்லும்.
திட்டத்தின் மொத்த நீளம் 11.8 கி.மீ. இது தானேவிலிருந்து போரிவலி வரையிலான பயணத்தை 12 கி.மீ குறைக்கும். பயண நேரத்தில் சுமார் 1 மணி நேரம் மிச்சமாகும்.
மேலும் ரூ. 6,300 கோடி மதிப்பிலான கோரேகான் முலுண்ட் இணைப்புச் சாலையில் சுரங்கப்பாதை அமைக்கும் திட்டத்திற்கும் பிரதமர் மோடி அடிக்கல் நாட்டுகிறார்.
இதன் மொத்த நீளம் சுமார் 6.65 கிலோமீட்டர் ஆகும். இது நவி மும்பை மற்றும் புனே மும்பை விரைவுச்சாலையில் முன்மொழியப்பட்ட புதிய விமான நிலையத்துடன் மேற்கு புறநகர்ப் பகுதிகளுக்கு நேரடி இணைப்பை வழங்கும்.
நவி மும்பையில் உள்ள கல்யாண் யார்டு மறுவடிவமைப்பு மற்றும் விரைவுச் சக்தி பன்னோக்கு சரக்கு முனையத்திற்கு அடிக்கல் நாட்டுகிறார். லோக்மான்ய திலக் ரெயில் நிலையத்தில் உள்ள புதிய நடைமேடைகளையும், சத்ரபதி சிவாஜி மகாராஜ் ரெயில் நிலையத்தில் நடைமேடை எண் 10 மற்றும் 11-ன் விரிவாக்கத்தையும் நாட்டுக்கு அர்ப்பணிக்கிறார்.
சுமார் ரூ.5600 கோடி ஒதுக்கீட்டில் முதல்-அமைச்சர் யுவ காரிய பிரசிஷன் திட்டத்தையும் பிரதமர் தொடங்கி வைக்கிறார். இது 18 முதல் 30 வயதுக்குட்பட்ட இளைஞர்களுக்கு திறன் மேம்பாடு மற்றும் தொழில்துறை வெளிப்பாட்டிற்கான வாய்ப்புகளை வழங்கும் திட்டமாகும்.
பிரதமர் மோடி இரவு 7 மணிக்கு மும்பை பாந்த்ரா குர்லா வளாகத்தில் ஜி-பிளாக்கில் உள்ள இந்திய செய்தி சேவை (ஐ.என்.எஸ்) செயலகத்திற்கு சென்று ஐ.என்.எஸ் கோபுரங்களைத் திறந்து வைக்கிறார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்