என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
இந்தியா
கேரளாவில் அரிசி விலை கடும் உயர்வு- கிலோவுக்கு ரூ.10 அதிகரிப்பு
- கேரளாவில் அரிசியின் விலை பொது சந்தையில் கடுமையாக உயர்ந்துள்ளது.
- அரிசி விலை உயர்வை கட்டுப்படுத்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
திருவனந்தபுரம்:
தமிழகத்தில் தக்காளி விலை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. மற்ற காய்கறிகளின் விலையும் வழக்கத்தை விட கூடுதல் விலைக்கு விற்கப்படுகிறது. தமிழகத்தை போன்று மற்ற மாநிலங்களிலும் காய்கறிகளின் விலை அதிகரித்துள்ளது.
இந்த நிலையில் கேரளாவில் அரிசியின் விலை பொது சந்தையில் கடுமையாக உயர்ந்துள்ளது. ஒரு கிலோ ரூ.10 வரை அதிகரித்துள்ளது. சுரேகா அரிசி ரூ.38-ல் இருந்து ரூ.48 ஆகவும், மட்டாவடி அரிசி கிலோ ரூ.46-ல் இருந்து ரூ.54 ஆகவும், குருவா அரிசி ரூ.38-ல் இருந்து ரூ.40 ஆகவும், சோனாமசூரி ரூ.45-ல் இருந்து 50 ஆகவும், உயர்ந்துள்ளது.
இதேபோல் மற்ற ரக அரிசிகளின் விலையும் கணிசமாக அதிகரித்துள்ளது. ஜெயா ரக அரிசி ஆந்திரா அரசு மூலம் சப்ளைக்கு வந்ததால் அதன் விலை மட்டும் உயரவில்லை. அந்த அரிசி மானிய விலையில் கிலோ ரூ.25-க்கும், மானியம் இல்லாமல் ரூ.38-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
அரிசிகளின் விலை உயர்வு தொடர்ந்து இதே நிலையில் நீடித்தால் ஓணம் பண்டிகையின்போது ஒரு கிலோ ரூ.60-ஐ தாண்டுமென கூறப்படுகிறது. இதனால் அரிசி விலை உயர்வை கட்டுப்படுத்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.