என் மலர்
இந்தியா

விளையாட செல்போன் தராததால் பள்ளி மாணவன் தற்கொலை
- சாய்சரண் விளையாடுவதற்காக தனது தாயின் செல்போனை கேட்டார்.
- நீண்ட நேரம் செல்போனில் கேம் விளையாட கூடாது என கூறி செல்போனை தர தாய் மறுத்தார்.
திருப்பதி:
ஆந்திர மாநிலம், ஜெகத்யாளா மண்டலம், திப்பண்ணா பேட்டையை சேர்ந்தவர் நரேஷ். இவரது மனைவி ஜலா. மகன் சாய் சரண் (வயது 12). இவர் அங்குள்ள பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வந்தார். கடந்த ஒரு ஆண்டுக்கு முன்பு நரேஷ் துபாயில் வேலைக்கு சென்றார்.
சாய் சரண் பள்ளி முடித்து வீட்டுக்கு வந்தவுடன் தனது தாயின் செல்போனை எடுத்துக்கொண்டு நீண்ட நேரம் கேம் விளையாடி வந்தார்.
நேற்று சுதந்திர தின விழாவுக்கு செல்லாமல் வீட்டில் இருந்த சாய்சரண் விளையாடுவதற்காக தனது தாயின் செல்போனை கேட்டார்.
நீண்ட நேரம் செல்போனில் கேம் விளையாட கூடாது என கூறி செல்போனை தர மறுத்தார்.
இதனால் விரக்தி அடைந்த சாய்சரண் வீட்டில் இருந்த தூணில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். மகன் தூக்கில் தொங்குவதை கண்ட அவரது தாய் கதறி அழுதார்.
இதுகுறித்து போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து சாய் சரண் பிணத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.






