என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
இந்தியா
அமேதி தொகுதி மக்களுக்கு தீபாவளி பரிசுகளை வாரி வழங்கிய ஸ்மிருதி இரானி, ராகுல் காந்தி
- அடுத்த ஆண்டு நடைபெற உள்ள பாராளுமன்ற தேர்தலில் ராகுல் காந்தி மீண்டும் போட்டியிட உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
- பா.ஜனதா கட்சியின் அமேதி தொகுதி முன்னாள் தலைவர் தயா சங்கர் யாதவ் வெளியிட்டுள்ள ஒரு வீடியோ வைரலாகி வருகிறது.
லக்னோ:
உத்தரபிரதேச மாநிலத்தில் உள்ள அமேதி பாராளுமன்ற தொகுதி காங்கிரஸ் கட்சியின் கோட்டையாக கருதப்பட்டது.
குறிப்பாக இந்திரா காந்தி குடும்பத்தின் கோட்டையாக நீண்ட காலம் இருந்த அமேதி தொகுதியில் 2004-ம் ஆண்டு முதல் தொடர்ந்து 3 முறை ராகுல் காந்தி எம்.பி.யாக தேர்வானார். ஆனால் 2019-ம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலில் இத்தொகுதியில் பா.ஜ.க. சார்பில் போட்டியிட்ட ஸ்மிருதிஇரானியிடம் அவர் தோல்வி அடைந்தார்.
இந்நிலையில் அடுத்த ஆண்டு நடைபெற உள்ள பாராளுமன்ற தேர்தலில் ராகுல் காந்தி மீண்டும் போட்டியிட உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. அமேதி தொகுதியில் ராகுல் காந்தி நிச்சயம் போட்டியிடுவார் என உத்தரபிரதேச மாநில காங்கிரஸ் தலைவர் அஜய்ராய் கூறியிருந்தார். அதே நேரம் ஸ்மிருதிஇரானியும் மீண்டும் அந்த தொகுதியில் போட்டியிடுவதற்காக தீவிரமாக களப்பணியாற்றி வருகிறார்.
இந்நிலையில் தீபாவளி பண்டிகையையொட்டி அமேதி தொகுதி மக்களுக்கு ஸ்மிருதிஇரானியும், ராகுல்காந்தியும் போட்டி போட்டு தீபாவளி பரிசுகளை வழங்கியிருக்கிறார்கள். ஸ்மிருதிஇரானி அமேதி தொகுதி மக்களுக்கு செல்போன்கள், சுவர் கடிகாரங்கள், சேலைகள் வழங்கியுள்ளார்.
இதேபோல ராகுல் காந்தி தனது பங்கிற்கு அமேதி தொகுதி மக்களுக்காக பேண்ட், சட்டைகள் மற்றும் இனிப்புகள் என பரிசுகளை வழங்கியுள்ளார்.
ஸ்மிருதிஇரானி தரப்பில் தீபாவளி பரிசு வழங்கியதை உறுதிபடுத்திய பா.ஜ.க. செய்தி தொடர்பாளர் கோவிந்த்சவுகான் கூறுகையில், ஸ்மிருதி இரானியின் பரிசுகள் சமூகத்தில் பின்தங்கிய ஏழை, எளிய மற்றும் மாற்றுத்திறனாளி மக்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. பரிசுகள் தேவைப்படுபவர்களை சென்றடைவதை நாங்கள் உறுதி செய்துள்ளோம் என்றார்.
இதேபோல பா.ஜனதா கட்சியின் அமேதி தொகுதி முன்னாள் தலைவர் தயா சங்கர் யாதவ் வெளியிட்டுள்ள ஒரு வீடியோ வைரலாகி வருகிறது. அதில், ஸ்மிருதிக்கு வாக்களித்து பரிசுகளுக்கு நன்றி தெரிவிக்க வேண்டும் என பொதுமக்களை கேட்டுக்கொண்டுள்ளார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்