search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    உத்தரகாண்ட்டில் சுரங்கத்தில் சிக்கிய 41 தொழிலாளர்களை மீட்கும் பணி மீண்டும் தொடங்கியது
    X

    உத்தரகாண்ட்டில் சுரங்கத்தில் சிக்கிய 41 தொழிலாளர்களை மீட்கும் பணி மீண்டும் தொடங்கியது

    • சுமார் 46.8 மீட்டர் வரை துளையிடப்பட்ட நிலையில், மீட்பு பணி நேற்று தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டது.
    • துளையிடும் இயந்திரத்தில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு சரி செய்யப்பட்டுள்ளது.

    உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள உத்தர்காஷி என்ற இடத்தில் சுரங்கம் தோண்டும் பணியில் 41 தொழிலாளர்கள் ஈடுபட்டனர். அப்போது திடீரென ஏற்பட்ட நிலச்சரிவால் சுரங்கத்தின் ஒரு பகுதி மூடியது. இதனால் 41 தொழிலாளர்களும் சுரங்கத்திற்குள் சிக்கிக் கொண்டனர். அவர்களை மீட்கும் பணி நடைபெற்று வருகிறது.

    சுரங்கத்தில் சிக்கியுள்ள 41 தொழிலாளர்களுக்கு தப்பிக்கும் பாதையைத் தயார் செய்வதற்காக அமெரிக்க ஆகர் இயந்திரம் மூலம் துளையிடும் பணி தொடங்கப்பட்டது. துளையிடும் இயந்திரத்தில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு காரணமாக, உள்ளே சிக்கிய 41 தொழிலாளர்களை மீட்கும் முயற்சியில் நேற்று பின்னடைவு ஏற்பட்டது. சுமார் 46.8 மீட்டர் வரை துளையிடப்பட்ட நிலையில், மீட்பு பணி நேற்று தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டது.

    இந்நிலையில், துளையிடும் இயந்திரத்தில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு சரி செய்யப்பட்டு இன்று காலை 11 மணிக்கு பிறகு துளையிடும் பணி மீண்டும் தொடங்கியது.

    இன்னும் 12-14 மீட்டர்களே உள்ள நிலையில் எல்லாம் சரியாக நடந்தால் இன்று மாலைக்குள் தொழிலாளர்களை மீட்டுவிடலாம் என உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

    Next Story
    ×