என் மலர்tooltip icon

    இந்தியா

    தந்தையின் ஆசையை நிறைவேற்றிய மகனுக்கு குவியும் பாராட்டு
    X

    தந்தையின் ஆசையை நிறைவேற்றிய மகனுக்கு குவியும் பாராட்டு

    • மகன் தனது தந்தையை முதல் முறையாக விமானத்தில் அழைத்து செல்கிறார்.
    • விமானத்தில் ஏறும் போது மகன் தந்தையுடன் செல்பி எடுத்த புகைப்படத்தை பகிர்ந்துள்ளார்.

    சாமானிய மக்கள் தொலைதூர பயணங்களுக்கு பெரும்பாலும் ரெயிலையே பயன்படுத்துகிறார்கள். அவர்களுக்கு விமான பயணம் என்பது கனவாகவே இருக்கிறது.

    இந்நிலையில் தன் தந்தையின் கனவை நிறைவேற்றும் வகையில் ஒரு மகன் அவரை முதல் முறையாக விமானத்தில் ஏற்றிச் சென்று அவரது ஆசையை நிறைவேற்றி உள்ளார்.

    இதுதொடர்பாக இன்ஸ்டாகிராமில் பதிவிடப்பட்டுள்ள வீடியோவில், மகன் தனது தந்தையை முதல் முறையாக விமானத்தில் அழைத்து செல்கிறார். விமானத்தில் ஏறும் போது அவரது தந்தையுடன் செல்பி எடுத்த புகைப்படத்தை பகிர்ந்துள்ளார். வைரலாகி வரும் இந்த புகைப்படத்தை பார்த்த நெட்டிசன்கள் வாலிபருக்கு பாராட்டுக்களை தெரிவித்து வருகிறார்கள்.

    Next Story
    ×