என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
இந்தியா
X
இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
பஞ்சாப்பில் அத்துமீறி நுழைந்த 2 பாகிஸ்தான் டிரோன்கள் சுட்டு வீழ்த்தப்பட்டது
Byமாலை மலர்20 May 2023 1:53 PM IST (Updated: 20 May 2023 3:37 PM IST)
- ரத்தன் குராட் பகுதியில் சர்வதேச எல்லையை தாண்டி நுழைந்த மற்றொரு பாகிஸ்தான் டிரோனையும் எல்லைப்பாதுகாப்பு படையினர் சுட்டு வீழ்த்தினார்கள்.
- 2 டிரோன்களை சோதனை செய்த போது அதில் 2 பாக்கெட்டுகளில் 2.6 கிலோ கஞ்சா போன்ற போதைப் பொருட்கள் பொருத்தப்பட்டு இருந்தது தெரியவந்தது.
பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸ் மாவட்டம் உதார் தானிவால் சர்வதேச எல்லைப்பகுதியில் எல்லைப்பாதுகாப்பு படை வீரர்கள் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.
அப்போது இந்திய வான் பகுதியில் பாகிஸ்தானில் இருந்து அத்துமீறி நுழைந்து சந்தேகத்திற்கு இடமாக பறந்த டிரோனை அவர்கள் சுட்டுவீழ்த்தினார்கள். இதே மாவட்டத்தில் ரத்தன் குராட் பகுதியில் சர்வதேச எல்லையை தாண்டி நுழைந்த மற்றொரு பாகிஸ்தான் டிரோனையும் எல்லைப்பாதுகாப்பு படையினர் சுட்டு வீழ்த்தினார்கள்.
கறுப்பு நிறத்திலான இந்த 2 டிரோன்களை சோதனை செய்த போது அதில் 2 பாக்கெட்டுகளில் 2.6 கிலோ கஞ்சா போன்ற போதைப் பொருட்கள் பொருத்தப்பட்டு இருந்தது தெரியவந்தது. அந்த போதைப்பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
Next Story
×