என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
இந்தியா
ராகுல் கைப்பட்ட காலணி விலை மதிப்பற்றது.. கோடி ரூபாய் கொடுத்தாலும் தரமாட்டேன் - தொழிலாளி பிடிவாதம்
- செருப்பு தைக்கும் தொழிலாளி ராம்சேட்டுக்கு ராகுல் காந்தி புதிதாக தையல் எந்திரம் ஒன்றை அனுப்பி வைத்துள்ளார்.
- ராகுல் காந்தியுடனான சந்திப்பை தொடர்ந்து தொழிலாளி ராம்சேட் அந்த பகுதி மக்களிடம் பிரபலமானார்.
உத்தரபிரதேச மாநிலம் ரேபரேலி தொகுதியில் காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி கடந்த 26-ந்தேதி சுல்தான்பூரில் வழக்கு ஒன்றிற்காக கோர்ட்டுக்கு சென்றிருந்தார்.
அப்போது சுல்தான்பூரில் கோர்ட்டுக்கு வெளியே 40 ஆண்டுகளுக்கு மேலாக செருப்பு தைக்கும் தொழில் செய்து வரும் ராம்சேட் என்ற தொழிலாளியை சந்தித்து கலந்துரையாடினார்.
அப்போது ராம்சேட்டின் வேலைகள், அவர் அன்றாடம் சந்திக்கும் சவால்கள் குறித்து அவரிடம் ராகுல் காந்தி கேட்டறிந்தார். மேலும் காலணிகளை சரி செய்வது தொடர்பாகவும் ராகுல் காந்தி, ராம்சேட்டிடம் கற்றுக்கொண்டார்.
பின்னர் மறுநாள் செருப்பு தைக்கும் தொழிலாளி ராம்சேட்டுக்கு ராகுல் காந்தி புதிதாக தையல் எந்திரம் ஒன்றை அனுப்பி வைத்துள்ளார்.
கடைக்கு வந்த ராகுல் காந்திக்கு தொழிலாளி ராம்சேட் குளிர்பானம் வழங்கிய காட்சி.
ராகுல் காந்தி வழங்கிய பரிசால் இன்ப அதிர்ச்சி அடைந்த ராம்சேட், இனி கைகளால் செருப்பு தைக்க தேவையில்லை என மகிழ்ச்சியுடன் கூறினார். அதோடு ராகுல் காந்திக்கு 2 ஜோடி காலணிகளை பரிசாக அனுப்பி வைத்தார்.
ராகுல் காந்தியுடனான சந்திப்பை தொடர்ந்து தொழிலாளி ராம்சேட் அந்த பகுதி மக்களிடம் பிரபலமானார்.
இந்த நிலையில் ராகுல் காந்தி சரி செய்த செருப்பு மற்றும் ஷூவை ரூ.1 லட்சத்திற்கு ராம்சேட்டிடம் பலரும் விலைக்கு கேட்டுள்ளனர். ஆனால் ராம்சேட் அதனை கொடுக்க மறுத்துவிட்டார். இதுகுறித்து ராம்சேட் கூறியதாவது:-
என்னை பொறுத்தவரை ஜூலை 26-ந்தேதி எனக்கு அதிர்ஷ்ட நாளாகும். ராகுல் காந்தி எனது கடைக்கு வந்தது கடவுளே என் கடையில் வந்து இறங்கியது போன்று இருந்தது. நான் காலணிகளை எவ்வாறு சரி செய்கிறேன் என்பதை செய்து காட்டும்படி ராகுல் காந்தி என்னிடம் கேட்டார்.
சிறிது நேரத்தில் அவர் ஒரு செருப்பை எடுத்து என்னிடம் கொடுத்து அதை எப்படி தைப்பது என்று எனக்கு கற்றுக் கொடுக்கும்படி கேட்டார். நான் அவருக்கு செருப்பை தைப்பது குறித்து செய்து காட்டினேன்.
பின்னர் அவருக்கு ஒரு குளிர்பானம் கொடுத்தேன். அவர் அதை ஏற்றுக்கொண்டு என்னுடன் பகிர்ந்து கொண்டார். அப்போது ராகுல் காந்தி எனது தினசரி சம்பாத்தியம் குறித்து விசாரித்தார்.
அவரிடம் நான் மாதம் ரூ.5 ஆயிரம் முதல் ரூ.6 ஆயிரம் வரை சம்பாதிக்கிறேன் என கூறினேன். அதோடு அவரிடம் செருப்பு தைக்கும் எந்திரம் வழங்குமாறு உதவி கேட்டேன். அவரும் வழங்குவதாக உறுதி அளித்தார். மறுநாளே செருப்பு தைக்கும் மின்சார எந்திரத்தை ராகுல் காந்தி எனக்கு பரிசாக அனுப்பினார்.
அவருக்கு நான் தைப்பதற்காக கற்றுக்கொடுத்த செருப்பு மற்றும் ஷூவை ஒரு லட்சத்திற்கு மேல் பலர் கேட்கிறார்கள். ஆனால் அவை விலைமதிப்பற்ற உடமைகள். பணத்தின் அடிப்படையில் அவற்றை எடைபோட முடியாது. கோடி ரூபாய் கொடுத்தாலும் நான் அவற்றை விற்க மாட்டேன்.
நான் வாழும் வரை அவற்றை பிரேம் செய்து என் கண்முன்னே வைத்திருப்பேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்