என் மலர்![tooltip icon](/images/info-tooltip.svg)
இந்தியா
![மதுபானத்தை பேட்டரி தண்ணீரில் கலந்து குடித்த கட்டிட தொழிலாளி மரணம் மதுபானத்தை பேட்டரி தண்ணீரில் கலந்து குடித்த கட்டிட தொழிலாளி மரணம்](https://media.maalaimalar.com/h-upload/2023/09/09/1947138-500x3001918861-deadd.webp)
X
கோப்பு படம்.
மதுபானத்தை பேட்டரி தண்ணீரில் கலந்து குடித்த கட்டிட தொழிலாளி மரணம்
By
Maalaimalar11 Sept 2023 10:21 AM IST
![Maalaimalar Maalaimalar](/images/authorplaceholder.jpg?type=1&v=2)
- தண்ணீர் என நினைத்து பேட்டரி வாட்டரில் மதுவை கலந்து தொழிலாளி குடித்திருக்கிறார்.
- உடல் நலம் பாதிக்கப்பட்ட மோகனன், தோப்ரன்குடியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்.
திருவனந்தபுரம்:
கேரள மாநிலம் இடுக்கி மாவட்டம் அரக்குளம் பகுதியை சேர்ந்தவர் மோகனன்(வயது56). கட்டிட தொழிலாளியான இவருக்கு மது குடிக்கும் பழக்கம் இருந்துள்ளது. சம்பவத்தன்று தோப்ரன்குடி என்ற இடத்தில் கட்டிட வேலைக்காக தங்கியிருந்தார்.
அப்போது அவர், தண்ணீர் என நினைத்து பேட்டரி வாட்டரில் மதுவை கலந்து குடித்திருக்கிறார். இதனால் உடல் நலம் பாதிக்கப்பட்ட மோகனன், தோப்ரன்குடியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்.
பின்பு மேல் சிகிச்சைக்காக கோட்டயம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். அவரது மரணம் குறித்து இயற்கைக்கு மாறாண மரணம் என்று போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story
×
X