search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    அரசின் வரி விதிப்பு பயங்கரவாதம்.. ரூ.32,000 கோடி ஜி.எஸ்.டி. கேட்டு நோட்டீஸ்.. கொந்தளித்த  இன்போசிஸ்
    X
    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்

    'அரசின் வரி விதிப்பு பயங்கரவாதம்'.. ரூ.32,000 கோடி ஜி.எஸ்.டி. கேட்டு நோட்டீஸ்.. கொந்தளித்த இன்போசிஸ்

    • தாங்கள் அனைத்து நிலுவையையும் ஏற்கனவே செலுத்திவிட்டதாகவும், மேற்கூறிய பரிவர்த்தனைகள் ஜிஎஸ்டி வரம்புக்குள் வராது என்றும் தெரிவித்துள்ளது.
    • வரி செலுத்துவோரை ஏய்ப்பதற்கு ஜிஎஸ்டி அமைப்பு அவர்க்ளின் வியாபாரத்தில் தலையிட்டு கற்பனைக்கு எட்டாத விஷயங்களைச் செய்து வருகிறது'

    பெங்களூரில் இயங்கி வரும் பிரபல தொழில்நுட்ப நிறுவனமான இன்போசிஸ் நிறுவனத்திடம், ரூ.32,000 கோடி ஜிஎஸ்டி வரி கேட்டு pre-show cause நோட்டீஸ் அனுப்பப்பட்ட சம்பவம் பேசுபொருளாகியுள்ளது.

    கர்நாடகாவில் உள்ள Directorate General of GST Intelligence (DGGI) அனுப்பப்பட்ட இந்த நோடீசில், இன்போசிஸ் லிமிடட் நிறுவனத்தின் வெளிநாடு கிளைகளில் 2017 ஜூலை முதல் 2022 மார்ச் வரையிலான காலகட்டத்தில் நடந்த பரிமாற்றத்தில் ரூ.₹32,403 கோடி வரி ஏய்ப்பு நடந்துள்ளது என்றும் அந்த தொகையை தற்போது செலுத்த வேண்டும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

    இதற்குப் பதிலளித்துள்ள அந்நிறுவனம், தாங்கள் அனைத்து நிலுவையையும் ஏற்கனவே செலுத்திவிட்டதாகவும், மேற்கூறிய பரிவர்த்தனைகள் ஜிஎஸ்டி வரம்புக்குள் வராது என்றும் தெரிவித்துள்ளது.

    இதுகுறித்து இன்போசிஸ் முன்னாள் போர்டு உறுப்பினரும் தலைமை நிதி அலுவலருமான மோகன்தாஸ் பாய் தனது எக்ஸ் பாகத்தில், 'இது இருப்பதிலேயே மோசமான வரி விதிப்பு பயங்கரவாதம் 'tax terrorism' என்று விமர்சித்துள்ளார். வரி செலுத்துவோரை ஏய்ப்பதற்கு ஜிஎஸ்டி அமைப்பு அவர்களின் வியாபாரத்தில் தலையிட்டு கற்பனைக்கு எட்டாத விஷயங்களைச் செய்து வருகிறது' என்று அவர் தெரிவித்துள்ளார்.

    எனவே இந்திய ஐடி தொழில்நுட்பத்துக் கூட்டமைப்பான Nasscom இதில் தலையிட வேண்டும் என்று அவர் கோரிக்கை விடுத்தார். மேலும் இதுபோன்ற அச்செயல்கள் இந்தியாவில் முதல்வீடு செய்வதற்கு அச்சத்தை ஏற்படுத்தும் என்றும் அவர் கண்டித்துள்ளார்,

    இந்த விவகாரத்துக்கு நாஸ்காம் அமைப்பும் கண்டனம் தெரிவித்துள்ள நிலையில் கர்நாடக ஜிஎஸ்டி அதிகாரிகள் சர்ச்சைக்குரிய அந்த pre-show cause நோட்டீஸை திரும்பப்பெற்றுள்ளனர். இது குறித்த மேலதிக விளக்கத்தை விரைவில் ஜிஎஸ்டி நிர்வாகம் அளிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    Next Story
    ×