என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
இந்தியா
சாலை விதிமீறல்: அபராத தொகையில் மிகப்பெரிய தள்ளுபடியை அறிவித்த தெலுங்கானா அரசு
- 60 சதவீதம் முதல் 90 சதவீதம் வரை தள்ளுபடி செய்யப்படுகிறது.
- டிசம்பர் 26-ந்தேதி முதல் ஜனவரி 10-ந்தேதிக்குள் செலுத்த வேண்டும் என அறிவிப்பு.
சாலை போக்குவரத்து விதிமுறை மீறுபவர்களுக்கு போக்குவரத்துத்துறை அதிகாரிகளால் அபராதம் விதிக்கப்படும். லைசென்ஸ் இல்லாமல் வாகனம் ஓட்டுவது, ஹெல்மெட் அணியால் வாகனம் ஓட்டுவது, சிக்னலில் நிற்காமல் செல்வது, பார்க்கிங் செய்ய தடை செய்யப்பட்ட இடத்தில் வாகனத்தை நிறுத்தி வைப்பது போன்ற விதிமுறை மீறல் காரணத்திற்காக அபராதம் விதிக்கப்படும்.
சாலை விபத்துகளை தவிர்க்கும் வகையில் தற்போது தண்டனை மற்றும் அபராதம் அதிகப்படுத்தப்பட்டுள்ளது. இதனால் பலர் அபராதம் செலுத்த முடியாமல் உள்ளனர்.
இந்த வகையில் தெலுங்கானா மாநிலத்தில் போக்குவரத்து விதிமுறையை மீறி அபராதம் செலுத்த வேண்டிய நிலையில், அபராதம் செலுத்தாமல் இருக்கும் நபர்களுக்கு அம்மாநில அரசு 60 சதவீதம் முதல் 90 சதவீதம் வரை தள்ளுபடி வழங்கப்படும் என அறிவித்துள்ளது.
தெலுங்கானா மாநிலத்தில் தற்போது காங்கிரஸ் கட்சி புதிதாக ஆட்சி அமைத்துள்ளது. ரேவந்த் ரெட்டி முதல்வராக பதவி ஏற்றுள்ளார். காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்ட வாகன உரிமையாளர்கள் பயனடையும் வகையில் தெரிவிக்கப்பட்டதன் ஒரு பகுதி இது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
டிசம்பர் 26-ந்தேதி (நேற்று) முதல் ஜனவரி 10-ந்தேதிக்குள் நிலுவையில் உள்ள அபராதத் தொகையை கட்டுபவர்களக்கு இந்த தள்ளுபடி சலுகை பொருந்தும்.
தெலுங்கானா மாநில போக்குவரத்தின் e-challan இணைய தளத்தில் சென்று அவர்களுடைய வாகனத்திற்கான நிலுவை அபராதத் தொகை ரசீது உள்ளதா? என பரிசோதித்து, தள்ளுபடி செய்யப்பட்ட தொகையை கட்டலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தெலுங்கானா மாநிலத்தில் சுமார் 2 கோடி ரசீதுக்கு இன்னும் பணம் செலுத்தவில்லை எனத் தெரிகிறது.
2022-ல் நாடு முழுவதும் 7563.60 கோடி ரூபாய் அளவிற்க 4.73 ரசீதுகள் வழங்கப்பட்டுள்ளதாக பாராளுமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்திருந்தது.
தள்ளுவண்டி, தெலுங்கானா மாநில போக்குவரத்து கழகம் பேருந்துகள் நிலுவைத் தொகையில் 10 சதவீதம் மட்டுமே கட்டினால் போதும். இரு சக்கரம் மற்றும் மூன்று சக்கர வாகனங்கள் 20 சதவீதம் கட்டினால் போதும். 80 சதவீதம் தள்ளுபடி செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்