search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    வெள்ளத்தில் தெலுங்கானா : அமெரிக்காவில் இருந்து ட்வீட்.. கேடிஆர் - ரேவந்த் ரெட்டி இடையே வார்த்தைப் போர்!
    X
    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்

    வெள்ளத்தில் தெலுங்கானா : அமெரிக்காவில் இருந்து ட்வீட்.. கேடிஆர் - ரேவந்த் ரெட்டி இடையே வார்த்தைப் போர்!

    • தெலுங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி மற்றும் முன்னாள் முதலவர் கேசிஆர் மகன் கேடிஆர் இடையில் வார்த்தைப் போர் மூண்டுள்ளது.
    • கேடிஆர் அமெரிக்காவில் தனது விடுமுறையை அனுபவித்தபடி ட்வீட் மட்டும் செய்து கொண்டிருக்கிறார்

    மழை வெள்ளம்

    வங்கக்கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக ஆந்திரா மற்றும் தெலுங்கானா ஆகிய மாநிலங்களில் வரலாறு காணாத அளவுக்கு மழை கொட்டித்தீர்த்து வருகிறது. மழையினால் தெலுங்கானாவில் ஏற்பட்ட வெள்ள பாதிப்புகளில் இதுவரை 16 பேர் உயிரிழந்துள்ளனர்.

    வார்த்தைப் போர்

    இந்நிலையில் வெள்ள பாதிப்புகளைக் கையாளுவது குறித்து காங்கிரஸ் ஆளும் தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி மற்றும் பிஆர்எஸ் எம்எல்ஏவும் முன்னாள் முதலவர் சந்திரசேகர ராவின்[கேசிஆர்] மகனுமான கேடிஆர் இடையில் கடுமையான வார்த்தைப் போர் மூண்டுள்ளது.

    கேடிஆரின் சந்திரபாபு நாயுடு ரெபரென்ஸ்

    'ஆந்திரா, தெலங்கானா ஆகிய இரண்டு மாநிலங்களும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு 6 ஹெலிக்கப்டர்களை அம்மாநிலத்தில் மீட்புப் பணிக்கு அனுப்பியுள்ளார், ஆனால் தெலுங்கானா காங்கிரஸ் அரசு ஒரு ஹெலிக்கப்டரை கூட மீட்புப் பணிக்கு அனுப்பவில்லை. மாநிலம் முழுவதும் வெள்ளத்தால் அதிக பாதிப்புகளை சந்தித்துள்ளது, கம்மம் மாவட்டத்தில் நிலைமை இன்னும் மோசமாக உள்ளது.

    ஆனால் அந்த பகுதியை சேர்ந்த 3 பேர் அமைச்சர்களாக இருந்தும் அப்பகுதி மக்களுக்கு எந்த உதவியும் கிடைக்கவில்லை. பொறுமையிழந்த மக்கள் வீதியில் இறங்கி உதவி கேட்கின்றனர். காங்கிரஸ் எதிர்க்கட்சியாக இருந்தபோது வெள்ள சமயங்களில் ரூ.25 லட்சம் நிவாரணம் வழங்க வேண்டும் என்று கேட்டது. ஆனால் இப்போது ஆட்சிக்கு வந்ததும் ரூ.5 லட்சம் தான் நிவாரணம் அறிவிக்கப்பட்டுள்ளது' என்று தனது எக்ஸ் பக்கத்தில் காங்கிரஸ் அரசை கேடிஆர் சாடியுள்ளார்.

    ரேவந்த் ரெட்டி பதிலடி

    இந்நிலையில் வெள்ள பாதிப்புகளைப் பார்வையிட வந்த தெலுங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி செய்தியாளர்களிடம் பேசியதாவது, "கேசிஆர் தனது பார்ம் ஹவுஸை விட்டு வெளியே வரவே இல்லை. அதேநேரம் கேடிஆர் அமெரிக்காவில் தனது விடுமுறையை அனுபவித்தபடி ட்வீட் மட்டும் செய்து கொண்டிருக்கிறார். நானும் அமைச்சர்களும் தான் இங்குக் களத்தில் மக்களுக்கு உதவிக்கொண்டிருக்கிறோம்" என்று தெரிவித்தார்.

    மேலும் வானிலை மோசமாக உள்ள காரணத்தால் தான் ஹெலிகாப்டர்களை மீட்புப்பணிக்கு அனுப்ப முடியாத சூழல் உள்ளது. அதற்கு எங்களிடம் ஆதாரமும் உள்ளது என்று அமைச்சர் ஸ்ரீனிவாஸ் ரெட்டி, கேடிஆர் குற்றச்சாட்டுக்குப் பதிலளித்துள்ளார்.

    Next Story
    ×