search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    பெண்கள் மற்றும் திருநங்கைகளுக்கு இலவச பேருந்து பயணத்திற்கான அரசாணை வெளியீடு- நாளை முதல் அமல்
    X

    பெண்கள் மற்றும் திருநங்கைகளுக்கு இலவச பேருந்து பயணத்திற்கான அரசாணை வெளியீடு- நாளை முதல் அமல்

    • செயல்முறையை நெறிப்படுத்த மென்பொருள் அடிப்படையிலான லட்சுமி ஸ்மார்ட் கார்டை உருவாக்கும் பணியில் ஈடுபட்டுள்ளது.
    • முதல்வர் ரேவந்த் ரெட்டி, இரண்டு வாக்குறுதிகளையும் நாளை நிறைவேற்றுகிறார்.

    தெலுங்கானா மாநிலத்தில் நடந்த சட்டமன்ற தேர்தலில் 65 தொகுதியில் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்று ஆட்சியை கைப்பற்றியது. அந்த மாநிலத்தில் முதல் முறையாக காங்கிரஸ் ஆட்சியைப் பிடித்துள்ளது.

    இதை தொடர்ந்து, தெலுங்கானா மாநில முதல்வராக ரேவந்த் ரெட்டி நேற்று முன்தினம் பதவி ஏற்றார். இந்நிலையில், தெலுங்கானாவில் பெண்கள், அனைத்து வயது பெண்கள் மற்றும் திருநங்கைகளுக்கு "6 உத்தரவாதங்கள் - மகாலட்சுமி திட்டத்தின்" கீழ் இலவச பேருந்து பயணத்தை தெலுங்கானா அரசு அறிமுகப்படுத்தியுள்ளது.

    டிசம்பர் 8 தேதியிட்ட அரசு ஆணையின்படி, இத்திட்டம் டிசம்பர் 9ம் தேதி (நாளை) முதல் நடைமுறைக்கு வர உள்ளது மற்றும் தெலுங்கானா மாநில சாலை போக்குவரத்து கழகத்தின் கீழ் மாநில எல்லைகளுக்குள் இயக்கப்படும் பல்லே வெலுகு மற்றும் விரைவு பேருந்துகளின் கீழ் பயணிக்க இது பொருந்தும், முற்றிலும் இலவசம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    பயனர்களுக்கு தடையற்ற பயண அனுபவத்தை உறுதிசெய்யும் வகையில், செயல்முறையை நெறிப்படுத்த மென்பொருள் அடிப்படையிலான லட்சுமி ஸ்மார்ட் கார்டை உருவாக்கும் பணியில் ஈடுபட்டுள்ளது.

    இதைதொடர்ந்து, அம்மாநில முதல்வர் ரேவந்த் ரெட்டி, இரண்டு வாக்குறுதிகளையும் நாளை நிறைவேற்றுகிறார். அமல்படுத்த ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ள நிலையில், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் சோனியா காந்தியின் பிறந்தநாளை ஒட்டி, இந்த இரண்டு வாக்குறுதிகளும் டிசம்பர் 9ம் தேதி (நாளை) அமலுக்கு வருகிறது.

    Next Story
    ×