என் மலர்
இந்தியா
டெல்லியில் காங்கிரஸ் செயற்குழு கூட்டம் நாளை மறுநாள் நடைபெறுகிறது
- கட்சியின் செயல்பாடு குறித்தும் செயற்குழு கூட்டத்தில் ஆலோசிக்கப்பட வாய்ப்பு.
- ஆளும் பா.ஜ.க.வுக்கு நெருக்கடி அளிப்பது குறித்து ஆலோசிக்க வாய்ப்பு.
புதுடெல்லி:
காங்கிரஸ் செயற்குழு கூட்டம் நாளை மறுநாள் (வெள்ளிக்கிழமை) டெல்லியில் கூடுகிறது.
பாராளுமன்ற குளிா்கால கூட்டத்தொடா் நடைபெற்று வரும் நிலையில், அதானி நிறுவனம் மீதான லஞ்ச புகாா், மணிப்பூா் கலவரம் உள்ளிட்ட பல்வேறு விவகாரங்களை பாராளுமன்றத்தில் எழுப்பி ஆளும் பா.ஜ.க.வுக்கு நெருக்கடி அளிப்பது குறித்து இந்த கூட்டத்தில் ஆலோசிக்க வாய்ப்பு உள்ளதாகத் தெரிகிறது.
காங்கிரஸ் தலைவா் மல்லிகாா்ஜுன காா்கே தலைமையில் நடைபெறும் இந்த கூட்டத்தில் எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தி, கட்சியின் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி உள்பட பிற செயற்குழு உறுப்பினா்களும் பங்கேற்க உள்ளனா்.
அண்மையில் நடந்து முடிந்த ஜாா்க்கண்ட், மகாராஷ்டிர மாநில சட்டசபைத் தோ்தல்களில் கட்சியின் செயல்பாடு குறித்தும் செயற்குழு கூட்டத்தில் ஆலோசிக்கப்பட வாய்ப்பு உள்ளது.
அடுத்து வரவிருக்கும் டெல்லி சட்டசபை தோ்தலுக்கான கூட்டணி வாய்ப்புகள், அடுத்த ஆண்டு வரவிருக்கும் பீகாா் சட்டசபை தோ்தலுக்கான தயாா்நிலை குறித்தும் கட்சியின் முக்கியமான முடிவுகளை எடுக்கும் அதிகாரம் படைத்த செயற்குழுவில் விவாதிக்கப்பட வாய்ப்பு உள்ளதாக கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன.