search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    ஒருவரை மிரட்டி ஜெய் ஸ்ரீ ராம் சொல்ல வைப்பது இந்து மதம் கிடையாது - சசி தரூர் சொன்ன விளக்கம்
    X

    ஒருவரை மிரட்டி 'ஜெய் ஸ்ரீ ராம்' சொல்ல வைப்பது இந்து மதம் கிடையாது - சசி தரூர் சொன்ன விளக்கம்

    • ஒரு நல்ல இந்துவாக இருக்க நான்கு வழிகள் உள்ளன.
    • நீங்கள் என் அணியை ஆதரிக்கவில்லை, நான் உங்கள் தலையில் அடிக்கப் போகிறேன் என்று கூறுகிறார்கள்.

    காங்கிரஸ் திருவனநாதபுர எம்.பி. சசி தரூர் இந்து மதத்துக்கும், இந்துத்துவாவுக்கும் உள்ள வேறுபாட்டை சுட்டிக்காட்டி உள்ளார்.

    ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் இலக்கிய விழாவில், எழுத்தாளரும் காங்கிரஸ் எம்.பி.யுமான சசி தரூர் பேசுகையில், "ஒரு நல்ல இந்துவாக இருக்க நான்கு வழிகள் உள்ளன. ஞான யோகம் இருக்கிறது, அது வாசிப்பு மற்றும் அறிவு மூலம் கிடைப்பது, ஆன்மீகக் கருத்துக்களைப் பற்றி நீங்கள் படித்துணர்வது. அதை தான் நான் முயற்சிக்கிறேன்.

    பக்தி யோகம் இருக்கிறது, அதுதான் பெரும்பாலான மக்கள் செய்கிறார்கள். பின்னர் ராஜ யோகம் இருக்கிறது, உள்நிலை, தியானம், உங்களுக்குள் உண்மையைத் தேடுவது அது.

    இறுதியாக மகாத்மா காந்தி கடைபிடித்த கர்ம யோகம், அதாவது உங்கள் சக மனிதர்களுக்கு சேவை செய்வதன் மூலம் மனிதகுலத்திற்கு சேவை செய்து அதன்மூலம் மூலம் கடவுளை வணங்குவது.

    இந்து ஒருபோதும் வெறுப்பு என்னும் தீயை பற்றவைக்க மாட்டார்கள் என்று சுவாமி விவேகானந்தர் கூறுகிறார். நம்முடையது [ இந்து மதம் ] மட்டுமே ஒரே வழி என்று சொல்வதற்கு இடமில்லை.

    துரதிர்ஷ்டவசமாக இந்து மதத்தை சிலர், ஒரு அடாவடியான பிரிட்டிஷ் கால்பந்து குழு போன்ற சிறு அடையாளமாக குறைக்கிறார்கள். மேலும் அவர்கள், நீங்கள் என் அணியை ஆதரிக்கவில்லை, நான் உங்கள் தலையில் அடிக்கப் போகிறேன் என்று கூறுகிறார்கள்.

    நீங்கள் ஜெய் ஸ்ரீ ராம் என்று சொல்லவில்லையானால் உங்களை சவுக்கால் அடிக்க போகிறேன் என்று மிரட்டுகிறார்கள். அது இந்து மதம் இல்லை. அதற்கும் இந்து மதத்துக்கும் எந்த சம்பந்தமும் இல்லை" என்று தெரிவித்தார்.

    Next Story
    ×