search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    மூன்றரை வயது பெண் குழந்தையின் கழுத்தை நெரித்துக் கொன்ற தாய்.. கலங்க வைக்கும் பின்னணி
    X

    மூன்றரை வயது பெண் குழந்தையின் கழுத்தை நெரித்துக் கொன்ற தாய்.. கலங்க வைக்கும் பின்னணி

    • பெங்களூரைச் சேர்ந்த பெண் ஒருவருக்கு ஆட்டிச குறைபாடு கொண்ட இரட்டை பெண் குழந்தைகள் பிறந்துள்ளது.
    • ஆட்டிசம் என்பது ஒரு குறைபாடுதானே ஒழிய, நோயல்ல.

    பெங்களூரில் தனது ஆட்டிஸ குறைபாடு கொண்ட மூன்றரை மாத பெண் குழந்தையை தாய் கழுத்தை நெரித்து கொன்றுவிட்டு போலீசில் சரணடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பெங்களூரைச் சேர்ந்த பெண் ஒருவருக்கு ஆட்டிச குறைபாடு கொண்ட இரட்டை பெண் குழந்தைகள் பிறந்துள்ளது. ஒரு குழந்தைக்கு லேசான ஆட்டிச பாதிப்பு உள்ள நிலையில் மற்றோரு குழந்தை முழுமையாக ஆட்டிசத்தால் பாதிக்கப்பட்டுள்ளது.

    பெண்ணின் கணவன் வெளிநாட்டில் வேலை செய்து வரும் நிலையில் குழந்தைகளுடன் தனியாக அப்பெண் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் கடந்த வியாழனன்று தனது ஆட்டிச பாதிப்பு முழுமையாக உள்ள குழந்தையை கழுத்தை நெரித்து தாய் கொலை செய்துவிட்டு போலீசில் சரணடைந்துள்ளார். இதனைதொடர்ந்து அவரிடம் போலீஸ் விசாரணை நடத்தியதில், ஆட்டிச பாதிப்புடன் தனது குழந்தையின் எதிர்காலம் எவ்வாறு இருக்கும் என்ற கவலையில் அவளைக் கொல்ல முடிவு செய்தேன் என்று தெரிவித்துள்ளார்.

    மேலும் கடந்த சில மாதங்களாகவே அதிக மன அழுத்தத்தில் தான் இருந்ததால் விரக்தியில் எனது மகளை கொலை செய்தேன் என்றும் வாக்குமூலம் அளித்துள்ளார். அவர் மீது கொலை வழக்கு பதிவு செய்த போலீசார் அவரை கைது செய்து நீதிமன்றத் காவலில் சிறையில் அடைத்துள்ளனர்.

    தந்தை வெளிநாட்டில் இருந்து இன்னும் வராததால் கொலை செய்யப்பட்ட சிறுமியின் உடல் பிரேத பரிசோதனைக்குப் பிறகு உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. இரட்டைக் குழந்தைகளில் மற்றொரு குழந்தையின் எதிர்காலம் தற்போது கேள்விக்குறியாக மாறியுள்ளது

    நரம்பியல் வளர்ச்சிக் கோளாறான ஆட்டிசம் என்பது மூளை, தகவல்களைப் பயன்படுத்திப் புரிந்துகொள்ளும் திறனைத் தடுக்கும் ஒரு குறைபாடு ஆகும். இந்த குறைபாடு உள்ளவர்களுக்கு பார்த்தல், கேட்டல் என உணரும் விஷயங்களைச் சரியாகப் பயன்படுத்துவதில் சிரமம்.

    ஆனால் ஆட்டிசம் என்பது ஒரு குறைபாடுதானே ஒழிய, நோயல்ல. ஆட்டிசம் உள்ள குழந்தைகள் அதிக புத்திசாலிகளாக இருக்கவும் அதிக வாய்ப்புண்டு. ஆட்டிசம் குறைபாடு உள்ளவர்கள் அறிவியல் உட்பட பல்வேறு துறைகளில் சாதனையாளர்களாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

    Next Story
    ×