search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    சலூன் கடையில் ஹெட் மசாஜ் செய்து  கொண்ட இளைஞருக்கு நேர்ந்த விபரீதம்.. அதிர்ச்சி சம்பவம்
    X

    சலூன் கடையில் 'ஹெட் மசாஜ்' செய்து கொண்ட இளைஞருக்கு நேர்ந்த விபரீதம்.. அதிர்ச்சி சம்பவம்

    • தனது உடலின் இடது பக்கத்தில் கடுமையான வலியை உணரத்தொடங்கிய ராஜ்குமார் பேசுவதற்கும் சிரமப்பட்டுள்ளார்.
    • மூளைக்கு ரத்தம் அனுப்பும் கரோடிட் ஆர்டரி [carotid artery] சேதமானதால் அவருக்கு பக்கவாதம் ஏற்பட்டுள்ளது.

    கர்நாடக மாநிலம் பெல்லாரியில் பார்பர் ஷாப்பில் ஹெட் மசாஜ் செய்து கொண்ட 30 வயது இளைஞர் பக்கவாதம் ஏற்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பெல்லாரியை சேர்ந்த ராஜ்குமார் என்ற 30 வயது நபர் கடந்த 2 மாதங்கள் முன்பு வழக்கமாக முடிவெட்டிக்கொள்ளும் சலூனில் இலவசமாக ஹெட் மசாஜ் செய்துகொள்ள முற்பட்டுள்ளார். அந்த பார்பர், ராஜ்குமாரின் தலையை ஹெட் மசாஜ் என்ற பெயரில் கடுமையாக மீண்டும் மீண்டும் திரும்பியுள்ளார்.

    இதனால் அசவுகர்யமாக உணர்ந்த ராஜ்குமார் அதன்பின் வலியை கண்டுகொள்ளாமல் வீடு திரும்பி சாதாரணமாக வேலைகளில் ஈடுபட்டுள்ளார். ஆனால் சில மணி நேரங்களிலேயே தனது உடலின் இடது பக்கத்தில் கடுமையான வலியை உணரத்தொடங்கிய ராஜ்குமார் பேசுவதற்கும் சிரமப்பட்டுள்ளார். தனது உடலில் எதோ தவறாக நடக்கிறது என்பதை உணர்ந்து உடனே மருத்துவமனைக்குச் சென்றார்.

    ராஜ்குமாரைப் பரிசோதித்த மருத்துவர்கள் அவருக்குப் பக்கவாதம் ஏற்பட்டுள்ளதை கண்டறிந்தனர். ஹெட் மசாஜ் விவரத்தை அறிந்த மருத்துவர்கள் ராஜ்குமாரின் கழுத்து கடுமையாக திருப்பப்பட்டத்தில் மூளைக்கு ரத்தம் அனுப்பும் கரோடிட் ஆர்டரி [carotid artery] சேதமானதால் அவருக்கு பக்கவாதம் ஏற்பட்டதை கண்டறிந்தனர்.

    இதனை தொடர்ந்து ரத்தம் உறைதலை சரி செய்ய கடந்த 2 மாத காலமாக அவருக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்து தேற்றியுள்ளனர். இந்த சம்பவம் தற்போது வெளிச்சத்துக்கு வந்துள்ள நிலையில் வல்லுநர்கள் அல்லாமல் ஹெட் மசாஜ் செய்து கொள்வதில் உள்ள ஆபத்தைக் குறித்து மருத்துவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

    Next Story
    ×