search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    Jalebi
    X

    சூடா ஜிலேபி வாங்கிட்டு வா.. புகார் அளிக்க வந்தவரிடம்.. நூதன லஞ்சம் கேட்ட போலீஸ்

    • எவ்வளவு தேடியும் அவரால் தனது மொபைல் போனை கண்டறிய முடியவில்லை.
    • புகார் கொடுத்த குமாரை அதிரச் செய்யும் வகையில் பதில் அளித்தார்.

    உத்தர பிரதேசம் மாநில தலைநகர் லக்னோவில் இருந்து 91 கிலோமீட்டர்கள் தொலைவில் அமைந்துள்ள கிராமம் கனௌர். பாஹதுர்கார் காவல் நிலைய வட்டத்திற்குள் வரும் இந்த கிராமத்தை சேர்ந்தவர் குமார். கடந்த சனிக்கிழமை அன்று மருந்து வாங்கச் சென்ற இடத்தில் தனது மொபைல் போனை குமார் தவறவிட்டுள்ளார். எவ்வளவு தேடியும் அவரால் தனது மொபைல் போனை கண்டறிய முடியவில்லை.

    இதன் காரணமாக காவல் நிலையம் விரைந்த குமார் தனது மொபைல்போன் காணாமல் போனதை கூறி, அதனை கண்டுபிடித்துக் கொடுக்குமாறு போலீசாரிடம் கோரிக்கை விடுத்தார். மொபைல் போனை பறிக்கொடுத்த குமார் மனவேதனையில் கூறிய புகாரை முழுமையாக கேட்டுக் கொண்ட போலீஸ் அதிகாரி, இறுதியில் புகார் கொடுக்க குமாரை அதிரச் செய்யும் வகையில் பதில் அளித்தார்.

    மொபைல் பறிக்கொடுத்த குமாரிடம் அதனை சீக்கிரம் கண்டுபிடிக்கலாம் என்று கூறுவதற்கு பதில் போலீஸ் அதிகாரி- முதலில் கடைக்குச் சென்று சூடான பாதுஷா அல்லது ஜிலேபி ஆகியவற்றில் ஒரு கிலோ வாங்கி வருமாறு கூறினார். இனிப்பு வாங்காமல் போலீசார் புகாரை பதிய மாட்டார்கள் என்று உணர்ந்தவராக மொபைலை பறிக்கொடுத்த குமார் இனிப்பு கடைக்கு சென்று ஜிலேபி வாங்கி வந்தார்.

    குமார் வாங்கி வந்த ஜிலேபியை பெற்றுக் கொண்ட போலீசார், அதன்பிறகு மொபைல் போன் காணாமல் போனதை பதிவு செய்து கொண்டனர். முன்னதாக இதே மாதத்தில் காவலர் ஒருவர் பணியில் இருக்கும் போது உருளைக் கிழங்குகளை லஞ்சமாக பெற்றதற்கு பணி இடைநீக்கம் செய்யப்பட்டார்.

    Next Story
    ×