search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    உத்தரபிரதேசத்தில் வெள்ளம்: சாலையில் மனைவியை தூக்கிச் சென்ற கணவர்
    X

    உத்தரபிரதேசத்தில் வெள்ளம்: சாலையில் மனைவியை தூக்கிச் சென்ற கணவர்

    • சாலைகள் முழுவதும் மழை வெள்ளத்தில் மூழ்கியுள்ளது.
    • சமூக வலைதளங்களில் வீடியோ வைரல்.

    லக்னோ:

    உத்தரபிரதேச மாநிலத்தில் கடந்த சில நாட்களா கனமழை பெய்து வருகிறது. இதனால் கோண்டா, லக்கிம்பூர் கெரி, சீதாபூர், பரூகாபாத், பஹ்ரைச், பாரபங்கி, புடான், பல்லியா, அசம்கர், கோரக்பூர், அயோத்தி, வாரணாசி, பிரயாக்ராஜ் உள்ளிட்ட மாவட்டங்களில் சில இடங்களில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டு நகர சாலைகள் முழுவதும் மழை வெள்ளத்தில் மூழ்கியுள்ளது.

    இந்நிலையில் கோண்டா மாவட்டத்தில் உடல்நலம் பாதிக்கப்பட்ட 50 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவரை டயாலிசிஸ் சிகிச்சைக்காக ஆஸ்பத்திரிக்கு அழைத்து செல்வதற்காக அவரது கணவர் முயற்சி செய்தார்.

    ஆனால் இதற்காக கோண்டா மருத்துவக் கல்லூரி மருத்துவமனையை அவர் நாடிய போது, அவரது மனைவியை ஆஸ்பத்திரிக்கு அழைத்து செல்ல ஸ்ட்ரெச்சர் அல்லது சக்கர நாற்காலி வசதி செய்து கொடுக்கப்படவில்லை என கூறப்படுகிறது.

    இதனால் அவர் தனது மனைவியை வெள்ளம் சூழ்ந்த சாலையில் கையில் ஏந்தியவாறு தூக்கி சென்றுள்ளார். பின்னர் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது.

    இதற்கிடையே உடல்நலம் பாதிக்கப்பட்ட பெண்ணை அவரது கணவர் ஆஸ்பத்திரிக்கு கையில் தூக்கி சென்ற வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது. இதைத்தொடர்ந்து சுகாதார அதிகாரிகள் இது தொடர்பாக விசாரணை நடத்த உத்தரவிட்டனர்.

    Next Story
    ×