search icon
என் மலர்tooltip icon

    இந்தியா (National)

    தீயணைப்பு வாகனம்
    X
    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்

    ஐபிஎஸ் அதிகாரி வீட்டிற்கு தீயணைப்பு வாகனத்தில் தண்ணீர் சப்ளை- போலீஸ் கூறுவது என்ன?

    • வீடியோவை பார்த்த பயனர்கள், தீயணைப்பு வாகனங்களும் வீடுகளுக்கு தண்ணீர் வினியோகம் செய்கிறதா? என கேள்வி எழுப்பினர்.
    • 1993-ம் ஆண்டு பேட்ச் ஐபிஎஸ் அதிகாரியான தியாகி, மகாராஷ்டிராவில் கூடுதல் போலீஸ் டைரக்டர் ஜெனரலாக நியமிக்கப்பட்டுள்ளார்.

    டேராடூன்:

    முன்னாள் ஐபிஎஸ் அதிகாரியின் வீட்டுக்கு வெளியே தீயணைப்பு வாகனம் நிறுத்தி வைக்கப்பட்டு, வீட்டின் மாடியில் உள்ள நீர் தொட்டிகளை நிரப்புவது போன்ற வீடியோ சமூக வலைதளங்களில் பரவியது.

    வைரலான வீடியோ ஜூன் 15-ல் எடுக்கப்பட்டது என கூறப்படுகிறது. வீடியோவில், மகாராஷ்டிரா மூத்த ஐபிஎஸ் அதிகாரியான அர்ச்சனா தியாகியின் வீட்டிற்கு வெளியே தீயணைப்பு வாகனம் நிறுத்தப்பட்டுள்ளது. அங்கு புகை அல்லது நெருப்பு எதுவும் இல்லாமல் வாகனம் நிறுத்தப்பட்டிருப்பதைக் காட்டுகிறது.

    இந்த வீடியோவை பார்த்த பயனர்கள், தீயணைப்பு வாகனங்களும் வீடுகளுக்கு தண்ணீர் வினியோகம் செய்கிறதா? என்றும் தண்ணீர் தொட்டிகளை நிரப்ப தீயணைப்பு வாகனங்களைப் பயன்படுத்தினால், தீ விபத்து ஏற்பட்டால் என்ன நடக்கும் என்றும் கேள்வி எழுப்பினர்.


    இதையடுத்து இச்சம்பவம் குறித்து டேராடூன் போலீசார் விளக்கம் அளித்துள்ளனர். அதில், வயதானவர்கள் இரண்டு பேர் வசிக்கும் வீட்டின் சமையலறையில் சிலிண்டர் கசிவு ஏற்பட்டுள்ளதாக கிடைத்த தகவலை தொடர்ந்து தீயணைப்பு வாகனம் சம்பவ இடத்திற்கு அனுப்பப்பட்டது.

    உடனடியாக நடவடிக்கை எடுத்ததால், சிலிண்டரில் தண்ணீரை ஊற்றி கசிவைக் குறைத்ததால், பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. இச்சம்பவம் குறித்து மூத்த போலீஸ் சூப்பிரண்டு அஜய் சிங்கும் தீயணைப்பு அதிகாரியிடம் தகவல் கேட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

    1993-ம் ஆண்டு பேட்ச் ஐபிஎஸ் அதிகாரியான தியாகி, மகாராஷ்டிராவில் கூடுதல் போலீஸ் டைரக்டர் ஜெனரலாக நியமிக்கப்பட்டுள்ளார். கண்டிப்பான அதிகாரி என்று பெயர் பெற்றவர். 2014-ம் ஆண்டு ராணி முகர்ஜி நடிப்பில் வெளியான 'மர்தானி' திரைப்படம் இவரை அடிப்படையாகக் கொண்டு தயாரிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

    Next Story
    ×