search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    ராமனுக்கும் ராவணனுக்கும் உள்ள வித்தியாசம் என்ன?.. அமித் ஷாவிடம் கேள்வி கேட்ட வருண் தவான்
    X

    ராமனுக்கும் ராவணனுக்கும் உள்ள வித்தியாசம் என்ன?.. அமித் ஷாவிடம் கேள்வி கேட்ட வருண் தவான்

    • ராமரின் வாழ்க்கை அவரது தர்மத்தை அடிப்படையாகக் கொண்டது,
    • ராவணன் தனது அறிவைப் பற்றி கர்வத்துடன் இருந்தான்

    ஆஜ் தக் இந்தி சேனலில் அஜெண்டா ஆஜ் தக் என்ற நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது. அதில் சிறப்பு விருந்தினராக உள்துறை அமைச்சர் அமித் ஷா கலந்துகொண்டார்.

    அந்நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பாலிவுட் நடிகர் வருண் தவான், ராமாயணத்தில் வரும் ராமன், ராவணன் ஆகியோருக்கு இடையேயான மிகப்பெரிய வித்தியாசம் என்ன என்று அமித் ஷாவிடம் கேள்வி எழுப்பினார்.

    அதற்கு பதில் அளித்த அமித் ஷா, "சிலர் தங்களது விருப்பங்களை தங்களின் கடமைகளை கொண்டு தீர்மானிக்கிறார்கள். சிலர் தங்களது கடமைகளை அவர்களின் விருப்பங்களை கொண்டு முடிவு செய்கிறார்கள். இதுதான் ராமனுக்கும் ராவணனுக்கும் இடையே உள்ள வித்தியாசம். ராமரின் வாழ்க்கை அவரது தர்மத்தை அடிப்படையாகக் கொண்டது, அதே நேரத்தில் ராவணன் தனது சொந்த கொள்கைகள் மற்றும் எண்ணங்களின்படி தனது கடமைகளை மாற்ற முயன்றார்" என்று தெரிவித்தார்.

    இதனையடுத்து பேசிய வருண் தவான், "நீங்கள் ஆணவத்தை பற்றி குறிப்பிட்டுள்ளீர்கள். ராவணன் தனது அறிவைப் பற்றி கர்வத்துடன் இருந்தான், அதே சமயம் ராமன் ஆணவத்தைப் பற்றி அறிந்திருந்தான்" என்று தெரிவித்தார்.

    இதற்கு, "இதுவும் தர்மத்தின் வரையறைக்குள் தான் வருகிறது" என்று அமித் ஷா தெரிவித்தார்.

    இதனையடுத்து அமித் ஷாவை பாராட்டிய வருண் தவான், "அரசியலில் மக்கள் அவரை சாணக்கியர் என்று அழைக்கிறார்கள், ஆனால் தேசத்திற்கு தன்னலமின்றி சேவை செய்யும் அவரை நம் நாட்டின் ஹனுமான் என்று அழைக்க விரும்புகிறேன். வசனங்களை மனப்பாடம் செய்யும் நடிகர்களால் கூட இவ்வளவு தெளிவுடன் பேச முடியாது" என்று தெரிவித்தார்.

    Next Story
    ×