search icon
என் மலர்tooltip icon

    இந்தியா (National)

    மகாராஷ்டிரா சட்டப்பேரவை தேர்தலில் ஆர்.ஜே.டி. கட்சியுடன் கூட்டணி அமைத்து வி.சி.க. போட்டி
    X

    மகாராஷ்டிரா சட்டப்பேரவை தேர்தலில் ஆர்.ஜே.டி. கட்சியுடன் கூட்டணி அமைத்து வி.சி.க. போட்டி

    • மகாராஷ்டிரா சட்டமன்ற தேர்தலில் விடுதலை சிறுத்தைகள் கட்சி பத்து தொகுதிகளில் போட்டியிடுகிறது.
    • மகாராஷ்டிரா சட்டமன்ற தேர்தலில் ராஷ்ட்ரிய ஜனதா தளம் கட்சி பத்து தொகுதிகளிலும் போட்டியிடுகிறது.

    மகாராஷ்டிரா மாநிலத்தில் அடுத்த மாதம் 20-ந்தேதி 288 தொகுதிகளுக்கு ஒரே கட்டமாக தேர்தல் நடத்தப்பட இருக்கிறது.

    மகாராஷ்டிராவில் மகாயுதி, மஹா விகாஸ் அகாதி என இரண்டு பெயர்களில் மெகா கூட்டணி உள்ளன.

    மகாயுதி கூட்டணியில் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனா, அஜித் பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ் மற்றும் பா.ஜ.க. ஆகிய மூன்று கட்சிகள் உள்ளன. மகாயுதி கூட்டணிதான் ஆட்சி அமைத்துள்ளது. ஏக்நாத் ஷிண்டே முதல்வராக இருந்து வருகிறார். அஜித் பவார் மற்றும் பா.ஜ.க.வின் பட்நாவிஸ் ஆகியோர் துணை முதல்வராக உள்ளனர்.

    மகா விகாஸ் அகாதி என்ற எதிர்க்கட்சி கூட்டணியில் சரத் பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ் (சரத்சந்திரா பவார்), உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனா, காங்கிரஸ் ஆகிய மூன்று கட்சிகள் உள்ளன.

    இந்நிலையில், மகாராஷ்டிரா சட்டப்பேரவைத் தேர்தலில் ராஷ்ட்ரிய ஜனதா தளம் கட்சியுடன் கூட்டணி அமைத்து விசிக போட்டியிடுகிறது என்று விசிக தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்

    இன்று பத்திரிகையாளர்களை சந்தித்து பேசிய திருமாவளவன், மகாராஷ்டிரா மாநில சட்டமன்ற பொதுத் தேர்தலில் விடுதலை சிறுத்தைகள் கட்சி பத்து தொகுதிகளிலும் ராஷ்ட்ரிய ஜனதா தளம் கட்சி பத்து தொகுதிகளிலும் கூட்டணி அமைத்து போட்டியிடுகிறது. பிற தொகுதிகளில் இந்தியா கூட்டணியை ஆதரிக்கிறோம்" என்று தெரிவித்தார்.

    கங்காபூர், பத்நாபூர், நன்டெட் (தெற்கு), ஹிங்கோலி, கல்மனுரி, வாஸ்மாட், தெக்லூர், அவுரங்காபாத் (மையம்), முள்ளன்ட் ( மும்பை), கன்னட் ஆகிய 10 தொகுதிகளில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி போட்டியிடுகிறது.

    பிவாண்டி, மலேகோன், வாசிம், அவுரங்காபாத் (மேற்கு), அவுரங்காபாத் (கிழக்கு), புலம்பிரி, மும்பை மலாட், தாராவி, போக்கர்டன் ஜல்னா, துலே ஆகிய 10 தொகுதிகளில் ராஷ்ட்ரிய ஜனதா தளம் போட்டியிடுகிறது

    Next Story
    ×