search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    சட்னியில் நீச்சல் அடித்த எலி.. மாணவர்கள் அலறல்.. வீடியோ
    X

    சட்னியில் நீச்சல் அடித்த எலி.. மாணவர்கள் அலறல்.. வீடியோ

    • பணியாளர்களின் சுகாதார பராமரிப்பில் குளறுபடி உள்ளது என்று தலைப்பில் வீடியோ வெளியிடப்பட்டுள்ளது.
    • வீடியோவை பார்த்த பயனர்கள் பலரும் தங்களை கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.

    தெலுங்கானா மாநிலம் சுல்தான்பூரில் உள்ள ஜேஎன்டியூஎச் பல்கலைக்கழக பொறியியல் கல்லூரி மாணவர்களால் பதிவு செய்யப்பட்ட ஒரு வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.

    லட்சுமி காந்த் என்ற பயனர் எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள அதிர்ச்சியூட்டும் வீடியோவில், விடுதியில் உள்ள கேன்டினில் சட்னி நிறைந்த பெரிய பாத்திரத்தின் உள்ளே எலி ஒன்று நீந்துவதைக் காணமுடிகிறது.

    ஜேஎன்டியூஎச் சுல்தான்பூரில் "சட்னி"யில் எலி. பணியாளர்களின் சுகாதார பராமரிப்பில் குளறுபடி உள்ளது என்று தலைப்பிட்டு வெளியிடப்பட்ட வீடியோ தற்போது சுமார் 75K பார்வைகளை கடந்துள்ளது. வீடியோவை பார்த்த பயனர்கள் பலரும் தங்களை கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.

    அதில் ஒரு பயனர், "ஜேஎன்டியூ சுல்தான்பூரில் இந்த நிலை புதிதல்ல. 2016 முதல் 2020 வரையில் தரமான உணவை எங்களுக்கு வழங்குவதற்காக ஒவ்வொரு நாளும் நாங்கள் மெஸ் நிர்வாகத்திடம் வாதிட வேண்டியிருந்தது. இன்றும் இது தொடர்வதைப் பார்க்க வருத்தமாக இருக்கிறது" என கூறியிருந்தார்.

    இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்த சுகாதார அமைச்சர் தாமோதர் ராஜா நரசிம்ஹா உத்தரவிட்டுள்ளார்.

    Next Story
    ×