search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    பாராளுமன்றத் தேர்தல் கடைசி கட்ட வாக்குப்பதிவு  விறுவிறுப்புடன் தொடக்கம்
    X

    பாராளுமன்றத் தேர்தல் கடைசி கட்ட வாக்குப்பதிவு விறுவிறுப்புடன் தொடக்கம்

    • இன்றைய தேர்தலில் 57 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடைபெறுகிறது.
    • பிரதமர் மோடி போட்டியிடும் வாரணாசி தொகுதியில் வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

    இந்தியாவில் பாராளுமன்ற மக்களவைத் தேர்தல் வாக்குப்பதிவு 7 கட்டங்களாக நடைபெற்று வருகிறது. 6 கட்ட வாக்குப்பதிவு ஏற்கனவே முடிவடைந்த நிலையில் 7 ஆம் கட்டமும் கடைசி கட்டமுமான தேர்தல் வாக்குப்பதிவு இன்று (ஜூன் 1) காலை 7 மணிக்கு தொடங்கியுள்ளது. இன்று மாலை மாலை 6 மணி வரை வாக்குப்பதிவானது நடைபெறும்.

    இன்றைய தேர்தலில் 57 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இந்த 57 தொகுதிகளும் பீகார் (8), இமாச்சல பிரதேசம் (4), ஜார்க்கண்ட் (3), ஒடிசா (6), பஞ்சாப் (13), உத்தரபிரதேசம் (13), மேற்கு வங்காளம் (9), ஆகிய 7 மாநிலங்களும் , சண்டிகார் யூனியன் பிரதேசமும் அடக்கம். இந்த 57 தொகுதிகளிலும் 904 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.

    முக்கியமாக பிரதமர் மோடி போட்டியிடும் வாரணாசி தொகுதியில் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இந்த தொகுதியில் அவர் 3-ம் முறையாக போட்டியிடுகிறார். பாஜக சார்பில் நடிகை கங்கனா ரணாவத் போட்டியிடும் மண்டி தொகுதிக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெறுகிறது. 57 தொகுதிகளிலும் கடந்த 17-ந்தேதி இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது. கடந்த இரு வாரங்களாக அனல் பறக்கும் வகையில் நடந்த பிரச்சாரம் நேற்று முன் தினம் (மே 30) மாலை 6 மணியுடன் முடிவடைந்தது.

    முன்னதாக முதல் கட்ட தேர்தலில் 66.14 சதவீதம், 2-ம் கட்ட தேர்தலில் 66.71 சதவீதம், 3-ம் கட்ட தேர்தலில் 65.68 சதவீதம், 4-ம் கட்ட தேர்தலில் 69.16 சதவீதம், 5-ம் கட்ட தேர்தலில் 62.20 சதவீதம், 6-ம் கட்ட தேர்தலில் 63 சதவீத வாக்குகள் பதிவாகி உள்ளன. அனைத்து கட்ட தேர்தலிலும் பதிவான வாக்குகள் மொத்தமாக எண்ணப்பட்டு ஜூன் 4-ம் தேதி வாக்குப்பதிவு முடிவுகள் வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

    Next Story
    ×