search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    என்னதான் ஆச்சு!.. முடங்கியது IRCTC இணையதளம்.. ஒரே மாதத்தில் 3வது முறை - பயணிகள் அவதி
    X

    என்னதான் ஆச்சு!.. முடங்கியது IRCTC இணையதளம்.. ஒரே மாதத்தில் 3வது முறை - பயணிகள் அவதி

    • (IRCTC) இணையதளம் மற்றும் மொபைல் செயலி முடங்கியது.
    • உலகில் யாராவது வேலை நேரத்தில் தளத்தை பராமரிப்பில் வைத்திருப்பார்களா?

    ரெயில் டிக்கெட் முன்பதிவு செய்யும் இந்திய ரெயில்வேயின் ஐஆர்சிடிசி இணையத்தளம் ஒரே மாதத்தில் 3வது முறையாக முடங்கியுள்ளது.

    புத்தாண்டை ஒட்டி அதிக வெப் டிராபிக் காரணமாக இந்திய ரயில்வே கேட்டரிங் மற்றும் டூரிசம் கார்ப்பரேஷன் (IRCTC) இணையதளம் மற்றும் மொபைல் செயலி முடங்கியது.

    இதன் டிக்கெட் எடுக்கும் பயணிகள் சிரமத்துக்கு உள்ளாகினர். பல பயனர்கள் இணையதளத்தில் உள்நுழைய முடியவில்லை, மேலும் உள்நுழைய முடிந்தவர்கள் தங்கள் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்ய முடியவில்லை.

    காலை 10 மணிக்கு பயனர்கள் தட்கல் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்ய முயன்றபோது இந்த செயலிழப்பு ஏற்பட்டது. இதனைத்தொடந்து பல பயனர்கள் சமூக ஊடகங்களில் தங்கள் அதிருப்தியை வெளிப்படுத்தினர்.

    @RailMinIndia ஐஆர்சிடிசி இணையதளம் இன்று காலை 10 மணி முதல் செயல்படவில்லை, என்னால் தட்கல் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்ய முடியவில்லை.

    நான் வாடிக்கையாளர் சேவையை அழைத்தபோது, தளம் பராமரிப்பில் உள்ளது என்று அவர்கள் கூறுகிறார்கள், உலகில் யாராவது வேலை நேரத்தில் தளத்தை பராமரிப்பில் வைத்திருப்பார்களா? உங்கள் கஸ்டமர் கேர் குழுவை நீங்கள் மாற்ற வேண்டும் என்று ஒரு பயனர் X இல் (முன்னர் Twitter) பதிவிட்டுள்ளார்.

    தட்கல் முன்பதிவு-கிளாசிக் நேரத்திற்கு சற்று முன் ஐஆர்சிடிசி செயலிழந்தது என்று மற்றொரு பயனர் எக்ஸ் தளத்தில் ஸ்க்ரீன் ஷாட்களை பகிர்ந்தார். இந்நிலையில் தட்கல் நேரம் கடந்த பின்னர் ஐஆர்சிடிசி மீண்டும் செயல்படத் தொடங்கியுள்ளது. தட்கல் டிக்கெட் எடுக்க முடியாதவர்கள் சமூக வலைத்தளங்களில் புலம்பித் தவிக்கின்றனர்.

    Next Story
    ×