search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    ஆந்திராவில் ஆட்சி அமைக்க போவது யார்? மாயா ரோபோவின் அசத்தல் பதில்
    X
    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்

    ஆந்திராவில் ஆட்சி அமைக்க போவது யார்? மாயா ரோபோவின் அசத்தல் பதில்

    • ரோபோ யார் எந்த கேள்வி கேட்டாலும் கைகளை அசைத்து சைகைகளை காட்டி பதிலளிக்கிறது.
    • மாயா ரோபோ பதில் அளிக்கும் வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் பரவி ஆந்திர மாநிலத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.

    திருப்பதி:

    ஆந்திர மாநிலத்தில் கடந்த 13-ந்தேதி பாராளுமன்ற தேர்தலுடன் சட்டமன்றத்திற்கும் தேர்தல் நடந்தது. இந்த தேர்தலில் யார் வெற்றி பெற்று ஆட்சி அமைக்க போகிறார்கள் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

    அரசியல் ஆய்வாளர்கள் கூட இந்த கேள்விக்கு பதில் சொல்ல முடியாமல் தற்போது திணறி வருகின்றனர். வாக்குப்பதிவு எந்திரங்களில் மறைந்திருக்கும் உண்மை என்ன? வாக்காளர்கள் எந்த கட்சிக்கு ஆதரவு அளித்துள்ளனர் என்பதை யாராலும் யூகிக்க முடியாத அளவுக்கு இருப்பதாக அரசியல் விமர்சகர்கள் கூறி வருகின்றனர்.

    இதனால் அந்த மாநில மக்கள் ஆட்சி அமைக்கப்போவது யார் என்று எதிர்பார்ப்பில் உள்ளனர்.

    இதனிடையே துபாய் சென்ற ஆந்திர நபர் ஒருவர் ரோபோவிடம் இது பற்றி கேள்வி எழுப்பி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளார்.

    துபாயில் உள்ள ஆப் பியூச்சர் என்ற இடம் அனைவரையும் கவர்ந்து வருகிறது. இங்குள்ள மியூசியம் ஒன்றில் மாயா ரோபோ உள்ளது.

    இந்த ரோபோ யார் எந்த கேள்வி கேட்டாலும் கைகளை அசைத்து சைகைகளை காட்டி பதிலளிக்கிறது. உலகில் என்ன கேள்வி கேட்டாலும் பதில் சொல்ல ஒரு கணம் கூட யோசிப்பதில்லை.

    இந்த ரோபோ அருகில் சென்ற ஆந்திர நபர் ஒருவர் ஆந்திராவில் நடந்த சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சி அமைக்க போவது யார்? என கேள்வி எழுப்பினார்.

    இதனை கேட்டதும் ரோபோ ஒரு கணம் அப்படியே அசையாமல் நின்றது. இந்த கேள்விக்கு பதில் தெரிந்தாலும் சொல்ல முடியாது என ரோபோ கைகளை காட்டி பதில் அளித்தது. இதனைக் கேட்டதும் ஆந்திர நபர் திகைத்து போனார்.

    மாயா ரோபோ பதில் அளிக்கும் வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் பரவி ஆந்திர மாநிலத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.

    மனிதர்கள் மட்டுமின்றி மனிதர்கள் உருவாக்கிய செயற்கை நுண்ணறிவு கொண்ட ரோபோக்கள் கூட தேர்தல் விதிமுறைகளை கடைபிடித்து ஆந்திரா தேர்தல் குறித்து அசத்தலாக பதில் அளித்துள்ளதாக கருத்து தெரிவித்து வருகின்றனர்.

    Next Story
    ×