search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    கள்ளச்சாராய விவகாரத்தில் காங்கிரஸ் ஏன் மவுனம் காக்கிறது- கார்கேவுக்கு ஜே.பி நட்டா கடிதம்
    X

    கள்ளச்சாராய விவகாரத்தில் காங்கிரஸ் ஏன் மவுனம் காக்கிறது- கார்கேவுக்கு ஜே.பி நட்டா கடிதம்

    • கருணாபுரத்தில் அதிகளவில் தலித் மக்கள் வசிக்கின்றனர்.
    • இந்த வழக்கின் விசாரணையை சிபிஐக்கு மாற்றவும் திமுக அரசுக்கு காங்கிரஸ் அழுத்தம் கொடுக்க வேண்டும்.

    கள்ளக்குறிச்சி கருணாபுரம் மற்றும் மாதவச்சேரியை சுற்றியுள்ள பகுதியில் கடந்த 18-ந் தேதி மெத்தனால் கலந்த கள்ளச்சாராயம் குடித்ததால் இதுவரை 61 பேர் உயிரிழந்துள்ளனர். இன்னும் பலர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    தமிழகத்தில் நிகழ்ந்துள்ள கள்ளச்சாராய மரணங்கள் குறித்து காங்கிரஸ் தலைவர் கார்கே ஏன் மவுனம் சாதிக்கிறார் என்று சுகாதாரத்துறை அமைச்சர் ஜே.பி நட்டா கேள்வி எழுப்பியுள்ளார்.

    இந்த விவகாரம் தொடர்பாக கார்கேவுக்கு ஜே.பி நட்டா கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அக்கடிதத்தில், "திமுக - இந்தியா கூட்டணிக்கும் சட்டவிரோத சாராய மாபியாவுக்கும் இடையே எவ்வித தொடர்பும் இல்லாமல் இருந்திருந்தால் கள்ளச்சாராயத்தால் பலியான உயிர்களை காப்பாற்றியிருக்கலாம்.

    கருணாபுரத்தில் அதிகளவில் தலித் மக்கள் வசிக்கின்றனர். அவர்கள் வறுமை மற்றும் பாகுபாடு காரணமாக பல்வேறு சவால்களை சந்திக்கின்றனர். அவர்களுக்கு நிகழ்ந்த இத்தகைய பேரழிவு குறித்து காங்கிரஸ் கட்சி ஏன் அமைதி காக்கிறது.

    மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை அமைச்சர் முத்துசாமியை பதவியை விட்டு நீக்கவும் இந்த வழக்கின் விசாரணையை சிபிஐக்கு மாற்றவும் திமுக அரசுக்கு காங்கிரஸ் அழுத்தம் கொடுக்க வேண்டும்.

    ராகுல்காந்தியும் பிரியங்கா காந்தியும் கள்ளச்சாராயத்தால் உயிரிழந்தவர்களின் குடும்பத்தை சந்திக்க வேண்டும் அல்லது அவர்களுக்காக குரல் கொடுக்க வேண்டும்" என்று ஜேபி நட்டா தெரிவித்துள்ளார்.

    Next Story
    ×