என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
இந்தியா
ஆன்லைனில் 'கேக்' ஆர்டர் செய்த பெண்ணுக்கு அதிர்ச்சி
- வீட்டில் 3 பேர் மட்டுமே இருந்ததால் 200 கிராம் கேக் மட்டும் ஆர்டர் செய்துள்ளார்.
- பதிவு இன்ஸ்டாகிராமில் 57 ஆயிரத்திற்கும் அதிகமான விருப்பங்களை பெற்றது.
உணவு பொருட்கள் முதல் பிறந்தநாள் கேக் வரை பல பொருட்களையும் ஆன்லைனில் ஆர்டர் செய்யும் வாடிக்கையாளர்கள் அதிகரித்து வருகிறார்கள். அந்த வகையில் ஒரு பெண் தனது சகோதரி குழந்தையின் பிறந்த நாளை கேக் வெட்டி கொண்டாடுவதற்காக ஸ்விக்கியில் கேக் ஆர்டர் செய்துள்ளார்.
அப்போது வீட்டில் 3 பேர் மட்டுமே இருந்ததால் 200 கிராம் கேக் மட்டும் ஆர்டர் செய்துள்ளார். அந்த கேக்கில் அதிக வாசகம் எதுவும் வேண்டாம் என கருதிய அவர், தனது ஆர்டருடன் 'ஹேப்பி பர்த்டே ஸ்டிக்' சேர்த்து அனுப்பவும் என குறிப்பிட்டிருந்தார். ஆனால் பேக்கரி ஊழியர்கள், இதை தவறாக புரிந்து கொண்டு அவருக்கு ஆர்டர் கேக்கில் 'ஹேப்பி பர்த்டே ஸ்டிக்' என எழுதி கொடுத்துள்ளனர்.
இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த அந்த பெண் கேக்கின் புகைப்படத்தை சமூக வலைதளத்தில் பதிவிட்டு, நாங்கள் ஆச்சரியம் கொடுக்க நினைத்தோம், ஆனால் ஸ்விக்கி எங்களுக்கு ஒரு ஆச்சரியத்தை அளித்தது என்று நகைச்சுவையாக கூறியிருந்தார். அவரது இந்த பதிவு இன்ஸ்டாகிராமில் 57 ஆயிரத்திற்கும் அதிகமான விருப்பங்களை பெற்றது.