என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
இந்தியா
பெண் டாக்டர் கொலை - நாடு முழுவதும் மருத்துவர்கள் போராட்டம் - ஸ்தம்பித்த சேவைகள்.. வீடியோ
- எமெர்ஜென்சி சேவைகளை தவிர்த்து வழக்கம்போல் நடைபெறும் வெளி நோயாளிகள் பிரிவு மற்றும் அறுவை சிகிச்சைகள் ஆகியன நடைபெறாது.
- மருத்துவ சங்கங்களோடு சேர்ந்து மருத்துவர்கள் நாடு முழுவதும் தீவிரமாக போராட்டம் நடத்தி வருகின்றனர்
கொல்கத்தா ஆர்.ஜி. கர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் பணியாற்றிய 31 வயது பயிற்சி பெண் மருத்துவர் கடந்த 9 ஆம் தேதி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. கொல்லப்பட்ட [பெண் மருத்துவருக்கு நீதி கேட்டு கல்கத்தாவில் போராட்டம் வெடித்தது. இந்த போராட்டம் கலவரமாகவும் மாறியது. குற்றவாளி கைது செய்யப்பட்ட நிலையிலும் போராட்டம் ஓய்ந்தபாடில்லை. இதற்கிடையில் இந்த வழக்கை மேற்கு வங்க அரசு சிபிஐ இடம் ஒப்படைத்துள்ளது .
இந்நிலையில் பல்வேறு மருத்துவ சங்கங்கள் இன்று நாடு முழுவதும் பெரிய அளவிலான போராட்டங்களை முன்னெடுத்துள்ளன. நாளை[ஆகஸ்ட் 17] காலை 6 மணி முதல் [ஆகஸ்ட்18] காலை 6 மணி வரை நாடு முழுவதும் மருத்துவ சேவைகளை நிறுத்துவதாக இந்திய மருத்துவ கூட்டமைப்பு அறிக்கை வெளியிட்டுள்ளது. இந்த 24 மணிநேரத்தில், எமெர்ஜென்சி சேவைகளை தவிர்த்து வழக்கம்போல் நடைபெறும் வெளி நோயாளிகள் பிரிவு மற்றும் அறுவை சிகிச்சைகள் ஆகியன நடைபெறாது.
அம்ரிஸ்தரில் பஞ்சாப் அரசு மருத்துவமனை கல்லூரி, ரெசிடெண்ட் டாக்டர் அசோசியேசன் உள்ளிட்டவை இன்று முதலே காலவரையின்றி இந்த சேவைகளை நிறுத்தியுள்ளன.
மத்தியப் பிரதேச தலைநகர் போபாலில் உள்ள காந்தி மருத்துவக் கல்லூரி, பஞ்சாப் மாநிலத்தில் PCMS உள்ளிட்ட மருத்துவ அமைப்புகள், சிவில் மருத்துவமனை, குரு நானக் மருத்துவமனை பயிற்சி ஜூனியர் மருத்துவர்கள், டெல்லியின் RMS மருத்துவமனை மருத்துவர்கள், கேரளா மாநிலம் திருவனந்தபுரத்தில் ரெசிடெண்ட் டாக்டர் அசோசியேசன் மருத்துவர்கள், ஹைதராபாத்தில் இயங்கி வரும் காந்தி மருத்துவமனை மருத்துவர்கள், மும்பையில் செயல்படும் மருத்துவமனை டாக்டர்கள், கால்கத்தாவில் உள்ள பல்வேறு மருத்துவர்கள் என நாடு முழுவதும் இன்று தீவிரமான போராட்டம் நடந்து வருகிறது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்