search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    பணி அழுத்தம்: கணினியில் வேலை செய்ய பிடிக்காமல் இடது கையின் 4 விரல்களையும் வெட்டி வீசிய ஊழியர்
    X

    பணி அழுத்தம்: கணினியில் வேலை செய்ய பிடிக்காமல் இடது கையின் 4 விரல்களையும் வெட்டி வீசிய ஊழியர்

    • தனது தந்தைவழி உறவினரின் அனப் ஜெம்ஸ் என்ற வைர நிறுவனத்தில் கணினி ஆபரேட்டராக வேலை செய்து வந்துள்ளார்.
    • அம்ரோலி ரிங் ரோடுக்கு சென்று அங்கு வண்டியை நிறுத்திவிட்டு இரவு 10 மணியளவில் 4 விரல்களையும் துண்டித்தேன்.

    குஜராத்தின் சூரத்தில் 32 வயது நபர் ஒருவர் வேலை தொடர்பான மன அழுத்தத்தின் காரணமாக தனது இடது கையில் நான்கு விரல்களை துண்டித்துக்கொண்டதாக நகர காவல்துறை தெரிவித்துள்ளது.

    குஜராத்தில் வேலையில் ஏற்பட்ட மன அழுத்தத்தின் காரணமாக 32 வயது நபர் ஒருவர் தனது இடது கையில் உள்ள 4 விரல்களையும் வெட்டிக் கொண்ட சம்பவம் நிகழ்ந்துள்ளது.

    குஜராத் மாநிலம் சூரத் நகரை சேர்ந்தவர் மயூர் தராபரா [Mayur Tarapara]. தனது தந்தைவழி உறவினரின் அனப் ஜெம்ஸ் என்ற வைர நிறுவனத்தில் கணினி ஆபரேட்டராக இவர் வேலை செய்து வந்துள்ளார்.

    இந்நிலையில் இவரது இடதுகையின் விரல்கள் வெட்டப்பட்டது குறித்து குடும்பத்தினர் போலீசில் புகார் அளித்துள்ளனர். நண்பர் வீட்டுக்கு சென்றுகொண்டிருந்தபோது சாலையோரத்தில் மயங்கி விழுந்ததிலிருந்து தனது விரல்களைக் காணவில்லை என்று மயூர் போலீசிடம் கூறியுள்ளார்.

    சூனியம் செய்யும் நோக்கத்தில் விரல்கள் வெட்டி எடுத்துச் செல்லப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகம் முதலில் எழுந்தது. ஆனால் போலீஸ் விசாரணையில் இவரின் வாகனம், தொலைப்பேசி, பணம் உள்ளிட்ட உடைமைகள் திருடப்படாமல் விரல்கள் மட்டும் வெட்டப்பட்டது போலீசுக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியது. எனவே மேலதிக விசாரணையில் மயூர் நடந்ததை ஒப்புக்கொண்டார்.

    கடந்த வாரம் சிங்கன்பூரில் உள்ள சார் ரஸ்தா அருகே உள்ள கடையில் கூர்மையான கத்தியை வாங்கினேன். நான்கு நாட்களுக்குப் பிறகு ஞாயிற்றுக்கிழமை இரவு அம்ரோலி ரிங் ரோடுக்கு சென்று அங்கு வண்டியை நிறுத்திவிட்டு இரவு 10 மணியளவில் 4 விரல்களையும் துண்டித்தேன்.

    ரத்தம் கசிவதை தடுக்க முழங்கையின் அருகே கயிறை இறுக்கமாகக் காட்டினேன், பின்னர் கத்தியையும் விரல்களையும் பையில் போட்டு தூக்கி எறிந்தேன் என வாக்குமூலம் அளித்துள்ளார்.

    மேலும் தனது முதலாளி தனது தந்தையின் உறவினர் என்பதால் எனது குடும்பக் கடமைகள் காரணமாக வேலையில் சிக்கிக்கொண்டதாக உணர்ந்தேன்.

    அங்கு வேலை செய்ய எனக்கு விரும்பவில்லை, அதை யாரிடமும் சொல்லும் தைரியம் தனக்கு இல்லை, எனவே விரலை வெட்டிக்கொண்டால் கணினியில் வேலை செய்ய முடியாது என்பதால் அவ்வாறு செய்தேன் என்று அவர் போலீசிடம் தெரிவித்துள்ளார். மயூருக்கு திருமணமாகி 2 வயதில் ஒரு பெண் குழந்தை இருப்பதாகக் கூறப்படுகிறது.

    Next Story
    ×