search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    அதிகாரத்தோடு மல்யுத்தம்.. ஒலிம்பிக்கில் இந்தியா பின்தங்க வீராங்கனைகளின் போராட்டமே  காரணம் - WFI தலைவர்
    X

    அதிகாரத்தோடு மல்யுத்தம்.. 'ஒலிம்பிக்கில் இந்தியா பின்தங்க வீராங்கனைகளின் போராட்டமே காரணம்' - WFI தலைவர்

    • பிரிஜ் பூசனின் நண்பரும் ஆர்எஸ்எஸ் புள்ளியுமான சஞ்சய் சிங் மல்யுத்த சம்மேளன தலைவர் ஆனார்.
    • 'இந்த வருட ஒலிம்பிக்ஸ் மல்யுத்தத்தில் இந்தியா 6 பதகங்களுக்கும் மேல் வென்றிருக்கும்.. ஆனால்'

    பாரீஸ் ஒலிம்பிக்ஸ் - ஒரு இந்தியக் கனவு

    பாரீஸ் ஒலிம்பிக்ஸ் மல்யுத்த இறுதிப்போட்டியில் உடல் எடை அதிகரித்த காரணத்துக்காக இந்திய வீராங்கனை வினேஷ் போகத் தகுதி நீக்கம் செய்யப்பட்ட சம்பவம் இந்தியாவையே சோகத்தில் ஆழ்த்தியது.

    பெண்கள் 50 கிலோ எடைப்பிரிவுக்கான மல்யுத்த இறுதிப்போட்டியில் இந்திய வீராங்கனை வினேஷ் போகத் அமெரிக்காவைச் சேர்ந்த சாரா ஹில்டெப்ரண்ட்-ஐ எதிர்கொள்ள இருந்தார். ஆனால் வினேஷ் போகத் உடல் எடை 50 கிலோவுக்கு 100 கிராம்கள் அதிகமாக இருந்ததால் அவர் தகுதிநீக்கம் செய்யப்பட்டதாக ஒலிம்பிக் கமிட்டி அறிவித்தது.

    இதையடுத்து வெள்ளிப் பதக்கம் வழங்கக்கோரி வினேஷ் போகத்தின் முறையீட்டை விளாயாட்டுக்கான நடுவர் நீதிமன்றம் பரிசீலித்து வருகிறது. இதுதொடர்பான தீர்ப்பு வரும் ஆகஸ்ட் 16 ஆம் தேதி வரும் என எதிர்பார்க்கலாம். இந்தியா சார்பில் மல்யுத்தத்தில் [57 கிலோ எடைப்பிரிவில்] அமன் சேராவத் மட்டுமே பதக்கம் [வெண்கலம்] வென்றுள்ளார்.

    அதிகாரத்தோடு நடக்கும் மல்யுத்தம்

    வினேஷ் போகத்தின் தகுதி நீக்கம் முக்கியத்துவம் பெறுவதற்கு மற்றோரு காரணமும் உள்ளது. அதாவது இந்திய மல்யுத்த சம்மேளனத்தின் முன்னாள் தலைவரும் பாஜக முன்னாள் எம்.பியுமான பிரிஜ் பூஷன் சிங் மல்யுத்த வீராங்கனைகளை பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாக குற்றச்சாட்டு எழுந்த நிலையில் அவர் மீது எந்த நடவடிக்கையும் எடுக்காமல் மத்திய அரசு வேடிக்கை பார்த்தது. இதனால் பாதிக்கப்பட்ட வீராங்கனைகளுக்கு நியாயம் கேட்டு சக மல்யுத்த வீரர்களும், வீராங்கனைகளும் கடந்த வருட தொடக்கத்திலிருந்து டெல்லியில் தீவிரமான போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    அரசியல் விளையாட்டு

    இந்த போராட்டத்தின் முக்கிய முகமாக அறியப்பட்டவர் வினேஷ் போகத். அவர் மீதும் மற்றைய வீரர் வீராங்கனைகள் மீதும் மத்திய அரசானது அவர்கள் மீது கடுமையான அடக்குமுறையைப் பிரயோகித்தது. ஆனால் மாதக்கணக்கில் அவர்கள் நடத்திய போரட்டம் ஓரளவு வெற்றி அடைந்தது என்றே கூற வேண்டும். அதாவது, பிரிஜ் பூஷன் சிங் மல்யுத்த சம்மேளன தலைவர் பதவியில் இருந்து விலகிய பின் தேர்தல் நடத்தப்பட்டு அவரது நண்பரும் ஆர்எஸ் எஸ் பின்னணி கொண்ட புள்ளியான சஞ்சய் சிங் நியமிக்கப்பட்டார்.

    இடையில் சில காலம் மல்யுத்த சம்மேளனம் செயலிழந்த நிலையில் கடந்த பிப்ரவரி மாதம் மீண்டும் சஞ்சய் சிங் தலைமையில் செயல்படத் தொடங்கியது. இந்நிலையில் வினேஷ் போகத்தின் தற்போதைய தகுதி நீக்கத்தில் அரசியல் சதி ஒளிந்துள்ளதாகப் பலர் சந்தேகிக்கின்றனர். வினேஷ் போகத்துக்கு நியாயம் கிடைக்க வேண்டும் என்று அவருக்கு ஆதரவாக மற்ற விளையாட்டு வீரர்களும் ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.

    கைவிரித்த இந்திய ஒலிம்பிக் சங்கம்

    இதற்கிடையே வினேஷ் போகத் தகுதி நீக்கத்துக்கு இந்திய ஒலிம்பிக் சங்கம் பொறுப்பல்ல என்று அதன் தலைவர் பி.டி.உஷா கைவிரித்தது அனைவரிடையேயும் கோபத்தை ஏற்படுத்தியது. அதுமட்டுமின்றி , அதிக செலவு செய்தும், திறமையான வீரர் வீராங்கனைகள் இருந்தும் பாரீஸ் ஒலிம்பிக்சில் இந்தியா 6 பதக்கங்களை மட்டுமே பெற்று பதக்கப்பட்டியலில் மிகவும் பின்தங்கியுள்ள ஆதங்கமும் மக்களிடையே ஏற்பட்டுள்ளது. இது மத்திய அரசு மற்றும் இந்திய ஒலிம்பிக் சங்கத்தின் அக்கறையின்மையினாலேயே நடந்துள்ளது என்ற பொதுக்கருத்தும் மக்களிடையே நிலவி வருகிறது.

    அவர்தான் பொறுப்பு..

    இந்த நிலையில்தான் இந்திய மல்யுத்த சம்மேளன தலைவர் சஞ்சய் சிங், பாரீஸ் ஒலிம்பிக்சில் மல்யுத்தத்தில் ஒரே ஒரு பதக்கம் மட்டுமே பெற்று இந்தியா பிந்தங்கியுள்ளதற்கு கடந்த வருடம் மல்யுத்த வீரர் வீராங்கனைகள் நடத்திய போராட்டமே காரணம் என்ற கருத்தை தற்போது தெரிவித்துள்ளார்.

    'இந்த வருட ஒலிம்பிக்ஸ் மல்யுத்தத்தில் இந்தியா 6 பதகங்களுக்கும் மேல் வென்றிருக்கும். ஆனால் கடந்த 15-16 மாதங்களாக ஏற்பட்ட தொந்தரவுகளால் நாம் பாதகங்களை இழந்துள்ளோம்' என்று தெரிவித்துள்ளார்.மேலும் வினேஷ் போகத் தகுதி நீக்கம் குறித்து பேசியபோது, தகுதி நீக்கத்திற்கு 'அவர்தான் [வினேஷ் போகத்தான்] பொறுப்பு. தீர்ப்பு சரியாக வந்தால் இந்தியாவுக்கு மேலும் ஒரு பதக்கம் கிடைக்கும்' என்று தெரிவித்துள்ளார்.

    Next Story
    ×