என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
இந்தியா
ஆட்சி அமைக்க உரிமை கோரிய சோரம் மக்கள் இயக்கம்: கவர்னருடன் லால்டுஹோமா சந்திப்பு
- மிசோரத்தில் சோரம் மக்கள் இயக்கம் அபார வெற்றி பெற்றது.
- சோரம் மக்கள் இயக்க கட்சி தலைவர் லால்டுஹோமா கவர்னர் ஹரிபாபுவைச் சந்தித்து ஆதரவு கோரினார்.
அய்ஸ்வால்:
மிசோரம் சட்டசபைக்கு கடந்த மாதம் 7-ம் தேதி ஒரேகட்டமாக தேர்தல் நடந்தது. 40 தொகுதிகளுக்கான சட்டசபை தேர்தலில் பதிவான வாக்குகள் கடந்த திங்கட்கிழமை எண்ணப்பட்டது. இதில் சோரம் மக்கள் இயக்கம் கட்சி அங்கு ஆட்சியைக் கைப்பற்றியது.
இதையடுத்து, மிசோரமின் புதிய முதல் மந்திரியாக சோரம் மக்கள் இயக்கம் கட்சி தலைவர் லால்டுஹோமா பதவியேற்பார் என தகவல் வெளியானது. ஆளும் மிசோ தேசிய முன்னணி கட்சி 10 தொகுதிகளையும், பா.ஜ.க. 2 தொகுதிகளையும், காங்கிரஸ் ஒரு தொகுதியையும் கைப்பற்றியது.
இந்நிலையில், சோரம் மக்கள் இயக்க கட்சி தலைவர் லால்டுஹோமா தனது ஆதரவாளர்கள் அடங்கிய பட்டியலை கவர்னர் ஹரிபாபுவைச் சந்தித்து ஆதரவு கோரினார்.
இதுதொடர்பாக, லால்டுஹோமா கூறுகையில், புதிய அரசு அமைப்பது குறித்து பேசினோம். அவர் என்னை முதல் மந்திரியாக நியமித்து, ஆட்சி அமைக்கச் சொன்னார். அது வெள்ளிக்கிழமை நடைபெறும். அடுத்த வாரம் முதல் அமர்வை நடத்துவோம் என தெரிவித்தார்.