search icon
என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    புதுச்சேரியில் இருந்து ரிசர்வ் வங்கிக்கு அனுப்பிய பணத்தில் ரூ.27 ஆயிரம் கள்ள நோட்டு
    X

    புதுச்சேரியில் இருந்து ரிசர்வ் வங்கிக்கு அனுப்பிய பணத்தில் ரூ.27 ஆயிரம் கள்ள நோட்டு

    • புதுச்சேரி வங்கிகளில் இருந்து ரூபாய் நோட்டுகள் லாரிகள் மூலம் அனுப்பி வைக்கப்பட்டது.
    • போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    புதுச்சேரி:

    புதுச்சேரியில் உள்ள இந்தியன் வங்கி, பாரத ஸ்டேட் வங்கி உள்ளிட்ட ஏராளமான தேசிய வங்கிகள் உள்ளன.

    இங்கிருந்து 6 மாதங்களுக்கு ஒரு முறை கோடிக்கணக்கான ரூபாய் நோட்டுகள் சென்னையில் உள்ள மத்திய ரிசர்வ் வங்கியின் கிளைக்கு அனுப்பி வைப்பது வழக்கம்.

    அதன்படி கடந்த சில நாட்களுக்கு முன்பு புதுச்சேரி வங்கிகளில் இருந்து ரூபாய் நோட்டுகள் லாரிகள் மூலம் அனுப்பி வைக்கப்பட்டது.

    இதனை பரிசோதனை செய்தபோது அதில் 500 ரூபாய் நோட்டு கட்டுகளில் 55 கள்ள நோட்டுகள் என மொத்தம் ரூ.27,500 இருப்பது தெரியவந்தது. இது குறித்து ரிசர்வ் வங்கியின் சென்னை கிளை மேலாளர் அபிஷேக் சிங், புதுச்சேரி சி.பி.சி.ஐ.டி. போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார்.

    அதன் பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் பாபுஜி மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    வங்கி அதிகாரிகள், ஊழியர்கள் தங்களது வங்கிக்கு வரும் கள்ள ரூபாய் நோட்டுகளை எளிதாக கண்டறிந்து விடுவார்கள். அப்படி இருந்தும் ரிசர்வ் வங்கிக்கு அனுப்பிய பணத்தில் கள்ள ரூபாய் நோட்டுகள் இருந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    Next Story
    ×