search icon
என் மலர்tooltip icon

    விளையாட்டு

    உலகக் கோப்பை வில்வித்தை: அரையிறுதியில் இந்திய பெண்கள் அணி
    X

    உலகக் கோப்பை வில்வித்தை: அரையிறுதியில் இந்திய பெண்கள் அணி

    • முதல் இரண்டு ரவுண்டில் இந்திய வீராங்கனைகள் அதிக புள்ளிகள் சேர்த்தனர்.
    • இதனால் 5-2 என உக்ரைன் அணியை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறினர்.

    வில்வித்தை உலகக் கோப்பை துருக்கி நாட்டின் அன்டால்யா நகரில் நடைபெற்று வருகிறது. இதில் இந்திய பெண்கள் அணி (தீபிகா, பஜன், அங்கிதா) காலிறுதியில் ரிகர்வ் பிரிவில் உக்ரைன் ஜோடியை எதிர்கொண்டது. இதில் இந்திய பெண்கள் அணி 5-3 என வெற்றி பெற்று அரையிறுதிக்கு முன்னேறியுள்ளது.

    முதல் ரவுண்டில் இந்திய வீராங்கனைகள் 53 புள்ளிகளும், உக்ரைன் வீராங்கனைகள் 52 புள்ளிகளும் பெற்றனர்.

    2-வது சுற்றில் இந்திய வீராங்கனைகள் 53 புள்ளிகளும், உக்ரைன் வீராங்கனைகள் 54 புள்ளிகளும் பெற்றனர்.

    3-வது சுற்றில் இந்திய வீராங்கனைகள் 57 புள்ளிகள் பெற்றனர். உக்ரைன் வீராங்கனைகள் 54 புள்ளிகள் பெற்றனர்.

    4-வது சுற்றில் இந்திய வீராங்கனைகளும், உக்ரைன் வீராங்கனைகளும் தலா 53 புள்ளிகள் பெற்றனர்.

    ஒரு சுற்றில் அதிக புள்ளிகள் பெற்ற அணிக்கு 2 மார்க் வழங்கப்படும். சமநிலை பெற்றால் இரண்டு அணிகளுக்கும் தலா ஒரு மார்க் வழங்கப்படும். அதன் அடிப்படையில் இந்திய வீராங்கனைகள் 5-3 என வெற்றி பெற்றனர்.

    ஒவ்வொரு சுற்றிலும் ஒரு வீராங்கனை இரண்டு முறை என மூன்று வீராங்கனைகள் ஆறு அம்புகளை எய்த வேண்டும். வட்டத்தின் மையத்தை அம்பு தாக்கினால் 10 புள்ளிகள் வழங்கப்படும்.

    ஆண்கள் அணி நெதர்லாந்திடம் 1-5 என தோல்வியடைந்து வெளியேறியது.

    Next Story
    ×